இலித்தியம் வனேடியம் பாசுபேட்டு மின்கலம்
இலித்தியம் வனேடியம் பாசுபேட்டு மின்கலம் (Lithium vanadium phosphate battery) என்பது வனேடியம் பாசுபேட்டை எதிர் மின்வாயாகப் பயன்படுத்த முன்மொழியப்பட்ட இலித்தியம்-அயனி மின்கலமாகும். 2016 ஆம் ஆண்டு வரை இம்மின்கலம் வணிகமயமாக்கப்படவில்லை.
ஆராய்ச்சி
தொகுஇலித்தியம் வனேடியம் பாசுபேட்டு, Li3V2(PO4)3 உட்பட்ட வனேடியம் பாசுபேட்டுகள் இலித்தியம் அயனி மின்கலங்களுக்கான சாத்தியமான எதிர்மின் வாய்களாக ஆய்வு செய்யப்பட்டுள்ளன.[1][2] கரைசல் குழைமம் தயாரிப்பு முறைகளால் தயாரிக்கப்பட்ட இதே பொருள் 3.5 முதல் 4.1 வோல்ட்டு வரம்பிற்கு மேல் இலித்தியம் செருகல்/அகற்றுதலைக் காட்டியது. மூன்று நிலைகளாகச் செருகுதல்/அகற்றுதல் என்பதற்கான சான்றுகளும் இருந்தன.[3]
ɛ-VOPO4 சேர்மமும் ஓர் எதிர் மின்வாய் பொருளாக ஆய்வு செய்யப்பட்டு இரண்டு நிலை இலித்தியம் செருகல்/அகற்றல் செயல்முறையைக் கொண்டுள்ளது.[4] மீநுண் கட்டமைக்கப்பட்ட ɛ-VOPO4 ஒரு சாத்தியமான ஆக்சிசனேற்ற ஒடுக்க பொருளாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது.[5]
மேற்கோள்கள்
தொகு- ↑ Saıdi, M.Y.; Barker, J.; Huang, H.; Swoyer, J.L.; Adamson, G. (1 June 2003), "Performance characteristics of lithium vanadium phosphate as a cathode material for lithium-ion batteries", Journal of Power Sources, 119–121: 266–272, Bibcode:2003JPS...119..266S, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1016/S0378-7753(03)00245-3 Selected papers presented at the 11th International Meeting on Lithium Batteries
- ↑ Huang, H.; Yin, S.-C.; Kerr, T.; Taylor, N.; Nazar, L.F. (2002), "Nanostructured Composites: A High Capacity, Fast Rate Li3V2(PO4)3/Carbon Cathode for Rechargeable Lithium Batteries", Adv. Mater., 14 (21): 1525–1528, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/1521-4095(20021104)14:21<1525::AID-ADMA1525>3.0.CO;2-3
- ↑ Zhu, X.J.; Liu, Y.X.; Geng, L.M.; Chen, L.B. (1 October 2008), "Synthesis and performance of lithium vanadium phosphate as cathode materials for lithium ion batteries by a sol–gel method", Journal of Power Sources, 184 (2): 578–582, Bibcode:2008JPS...184..578Z, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1016/j.jpowsour.2008.01.007
- ↑ Stanley Whittingham, M.; Song, Yanning; Lutta, Samuel; Zavalija, Peter Y.; Chernovaa, Natasha A. (2005), "Some transition metal (oxy)phosphates and vanadium oxides for lithium batteries", J. Mater. Chem., 15 (33): 3362–3379, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1039/B501961C
- ↑ Chen, Zehua; Chen, Qiyuan; Chen, Liquan; Zhang, Ruibo; Zhou, Hui; Chernova, Natasha A.; Whittingham, M. Stanley (2013). "Electrochemical Behavior of Nanostructured ε-VOPO4 over Two Redox Plateaus". Journal of the Electrochemical Society 160 (10): A1777. doi:10.1149/2.064310jes.