வனேடியம் பாசுபேட்டு

வேதிச் சேர்மம்

வனேடியம் பாசுப்பேட்டுகள் (Vanadium phosphates) என்பவை VOxPO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் கனிம வேதியியல் சேர்மங்களாகும். இவற்றினுடைய நீரேற்றுகள் VOxPO4(H2O)n என்ற பொது மூலக்கூற்று வாய்ப்பாட்டால் குறிக்கப்படுகின்றன. இவற்றில் சில சேர்மங்கள் வணிக முறை ஆக்சிசனேற்ற வினைகளில் வினையூக்கிகளாக பயன்படுத்தப்படுகின்றன. வனெடியம் பாசுபேட்டு நீரில் கரையாது. மஞ்சள் நிறத்தில் திண்மாக இது காணப்படும். 1960 ஆம் ஆண்டுகளில் இருந்தே வனேடியம் பாசுப்பேட்டு வினையூக்கிகள் விரிவாக ஆராய்ப்பட்டு வந்துள்ளன. பியூட்டேனை மலேயிக் நீரிலியாக மாற்றுவதில் இவை முக்கியப்பங்கு வகிக்கின்றன.

வனேடியம் பாசுபேட்டு
இனங்காட்டிகள்
12359-27-2 (நீரிலி)
12293-87-7 (இருநீரேற்று)
பண்புகள்
H4O7PV (இருநீரேற்று)
வாய்ப்பாட்டு எடை 197.94 (இருநீரேற்று)
தோற்றம் மஞ்சள் திண்மம் (இருநீரேற்று)
கரையாது
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

வனேடியம்(V) பாசுப்பேட்டு தொகு

VOPO4.2H2O என்ற நீரேற்று வகை வனேடியம் பாசுப்பேட்டு பொதுவாகக் காணப்படும் ஒரு பாசுப்பேட்டு வகையாகும். நீரற்ற VOPO4 வகை ஏழு வகையான பல்லுருவத் தோற்றங்களில் காணப்படுகிறது. αI, αII, β, γ, δ, ω, மற்றும் ε. என்ற குறியீடுகளால் இப்பல்லுருவங்கள் அடையாளப்படுத்தப்படுகின்றன [1][2]. VO என்ற வாய்ப்பாட்டால் அடையாளப்படுத்தப்படும் வனேடைல் குழுவும் (PO43−) என்ற பாசுப்பேட்டு எதிர்மின் அயனியும் சேர்ந்து இப்பல்லுருவ வனேடியம் பாசுப்பேட்டுகளை உருவாக்குகின்றன. மஞ்சள் நிறத்தில் காணப்படும் இத்திண்மங்கள் டையா காந்தப்பண்பைக் கொண்டுள்ளன. ஒருவேளை இவற்றுடன் வனேடியம்(IV) வழிப்பெறுதிகள் கலந்து மாசு அடைந்தாலும் இவை அதே பண்புகளையே வெளிப்படுத்துகின்றன. வனேடியம் பாசுபேட்டு உப்பு மாதிரிகள் எலக்ட்ரான் பாராகாந்த ஒத்திசைவு சமிக்ஞைகளை வெளிப்படுத்துகின்றன. இந்நிறமாலை ஆய்வு மூலம் சோடி சேராத எலக்ட்ரான்களை கண்டறிய முடியும். பாரம்பரியமாக வனேடைல் குழு VO2+ அயனிகளின் வழிப்பெறுதிகளை குறிப்பிட பயன்பட்டாலும் இப்பொருள்களுக்கான வனேடைல் குழு என்பது வனேடியம்(V) ஆக்சோ மற்றும் வனேடியம்(IV) ஆக்சோ மையம் இரண்டும் சேர்ந்த தொகுதியாகும்.

VOPO4.2H2O தயாரிப்பு தொகு

வனேடியம் பெண்டாக்சைடு தொங்கலையும் பாசுப்பாரிக் அமிலத்தையும் சேர்த்து சூடுபடுத்தினால் வனேடியம் பாசுப்பேட்டு என்ற இருநீரேற்று உருவாகிறது. பிரகாசமான மஞ்சள் நிற திண்மமாக இச்சேர்மம் தனிமைப் படுத்தப்படுகிறது[3]. எக்சு கதிர் படிகவியல் ஆய்வின்படி வனேடியம்(V) மையங்கள் எண்முக வடிவங்களில் நீண்ட பலவீனமான பிணைப்புகளுடன் நீர் ஈந்தணைவிகளைப் பிணைத்துக் காணப்படுகின்றன[4].

 
VOPO4(H2O)2 சேர்மத்தின் V-O-P கூட்டின் கட்டமைப்பு (ஒரு தண்ணீர் அணிக் கோவையும் அனைத்து ஐதரசன் அணுக்களும் விடப்பட்டுள்ளன).

VOPO4.2H2O வினைகள் தொகு

VOPO4.2H2O உடன் ஆல்ககால்களை சேர்த்து ஒடுக்க வினைக்கு உட்படுத்தினால் வனேடியம் (IV) பாசுப்பேட்டு உப்புகள் உருவாகின்றன.

VOPO4.2H2O பயன் தொகு

வனேடியம் பாசுப்பேட்டு சேர்மங்கள் கரிம வேதியியலில் முக்கியமான வினையூக்கிகளாகப் பயன்படுகின்றன. பியூட்டேனை ஆக்சிசனேற்றம் செய்து மலேயிக் நீரிலி தயாரிக்கும் கரிம வேதியியல் வினையில் இவை வினையை வினையூக்கம் செய்கின்றன. VO(HPO4).0.5H2O சேர்மத்தை பைரோபாசுப்பேட்டாக (VO)2(P2O7) மாற்றுவதுதான் இவ்வினையூக்கிகளை செயலூக்கம் அடையச்செய்யும் முக்கியப் படிநிலையாகும். சி.ஏ.எசு எண் #58834-75-6 என்ற் குறியீட்டால் அடையாளம் காணப்படும் இப்பொருள் வனேடைல் பைரோபாசுப்பேட்டு என்றும் வனேடியம் ஆக்சைடு பைரோபாசுப்பேட்டு என்றும் அழைக்கப்படுகிறது[5].

வனேடியம்(IV) பாசுப்பேட்டு தொகு

 
VO(HPO4).0.5H2O. ஒரு பகுதியின் கட்டமைப்பு. வனேடியம் அணுக்கள் எண்முக வடிவிலும் பாசுபரசு அணுக்கள் நான்முக வடிவிலும் ஒருங்கிணைந்துள்ளன. கட்டமைப்பில் தண்ணீர் ஓர் இணைப்புப் பாலமாகும். நிறம்:சிவப்பு= O; சாம்பல் = V, H; காவி = P.

[6]]]

வனேடியம்(IV) பாசுப்பேட்டுகள் பல எண்ணிக்கையில் அறியப்படுகின்றன. இவை குறிப்பாக நீல நிறத்தில் காணப்படுகின்றன. இவ்வகை இன்ங்களில் பாசுப்பேட்டு எதிர்மின் அயனி தனியாக அல்லது இரட்டையாக புரோட்டானேற்றம் அடைந்துள்ளது. ஐதரசன் பாசுப்பேட்டு, ஈரைதரசன் பாசுப்பேட்டு VOHPO4.4H2O மற்றும் VO(HPO4).0.5H2O உள்ளிட்ட சேர்மங்கள் இதற்கு எடுத்துக்காட்டுகளாகும்.

வனேடியம்(III) பாசுப்பேட்டு தொகு

ஆக்சோ ஈந்தணைவிகள் இல்லாத வனேடியம் பாசுப்பேட்டுகள் VPO4•H2O மற்றும் VPO4•2H2O என்ற வாய்ப்பாடுகளால் குறிக்கப்படுகின்றன. ஒற்றை நீரேற்று சேர்மம் MgSO4•H2O கட்டமைப்பை ஒத்த அமைப்பைக் கொண்டுள்ளது[7]. நீரேறிய அலுமினியம் பாசுப்பேட்டின் கட்டமைப்பை இவ்வொற்றை நீரேற்று ஏற்றுக் கொள்கிறது.

மேற்கோள்கள் தொகு

  1. "New Contributions to the Structural Chemistry of Vanadyl Orthophosphate VOPO4". edoc.mpg.de. பார்க்கப்பட்ட நாள் 2019-09-13.
  2. Girgsdies, Frank; Schneider, Matthias; Brückner, Angelika; Ressler, Thorsten; Schlögl, Robert (2009-07-01). "The crystal structure of δ-VOPO4 and its relationship to ω-VOPO4". Solid State Sciences 11 (7): 1258–1264. doi:10.1016/j.solidstatesciences.2009.03.017. பன்னாட்டுத் தர தொடர் எண்:1293-2558. http://www.sciencedirect.com/science/article/pii/S1293255809001009. 
  3. Brody, John F.; Johnson, Jack W.; Vaughey, Jack (2007-01-05), Murphy, Donald W.; Interrante, Leonard V. (eds.), "Vanadyl Phosphates and Organylphosphonates", Inorganic Syntheses, John Wiley & Sons, Inc., pp. 241–248, doi:10.1002/9780470132616.ch45, ISBN 9780470132616
  4. Tietze, Hr (1981). "The crystal and molecular structure of oxovanadium(V) orthophosphate dihydrate, VOPO4(H2O)2" (in en). Australian Journal of Chemistry 34 (10): 2035. doi:10.1071/CH9812035. பன்னாட்டுத் தர தொடர் எண்:0004-9425. https://archive.org/details/sim_australian-journal-of-chemistry_1981_34_10/page/2035. 
  5. Dummer, N.F.; Bartley, J.K.; Hutchings, G.J. (2011), "Vanadium Phosphate Materials as Selective Oxidation Catalysts", Advances in Catalysis (in ஆங்கிலம்), Elsevier, vol. 54, pp. 189–247, doi:10.1016/b978-0-12-387772-7.00004-6, ISBN 9780123877727
  6. Koo, Hyun-Joo; Whangbo, Myung-Hwan; VerNooy, Paul D.; Torardi, Charlie C.; Marshall, William J. (2002). "Flux Growth of Vanadyl Pyrophosphate, (VO)2P2O7, and Spin Dimer Analysis of the Spin Exchange Interactions of (VO)2P2O7 and Vanadyl Hydrogen Phosphate, VO(HPO4)•0.5H2O" (in en). Inorganic Chemistry 41 (18): 4664–4672. doi:10.1021/ic020249c. பன்னாட்டுத் தர தொடர் எண்:0020-1669. பப்மெட்:12206689. 
  7. Vaughey, J. T.; Harrison, William T. A.; Jacobson, Allan J.; Goshorn, David P.; Johnson, Jack W. (1994). "Synthesis, structure, and properties of two vanadium(III) phosphates: V(PO4)•H2O and V1.23(PO4)(OH)0.69(H2O)0.31•0.33H2O" (in en). Inorganic Chemistry 33 (11): 2481–2487. doi:10.1021/ic00089a027. பன்னாட்டுத் தர தொடர் எண்:0020-1669. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வனேடியம்_பாசுபேட்டு&oldid=3682305" இலிருந்து மீள்விக்கப்பட்டது