இலின்னேயைட்டு

சல்பைடு கனிமம்

இலின்னேயைட்டு (Linnaeite) என்பது Co+2Co+32S4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் கோபால்ட்டு சல்பைடு கனிமமாகும். 1845 ஆம் ஆண்டு சுவீடனின் வாசுட்மேன்லாந்தில் இது கண்டுபிடிக்கப்பட்டது. சுவீடன் நாட்டைச் சேர்ந்த தாவரவியலாளர் கார்ல் லின்னேயசை (1707–1778) சிறப்பிக்கும் விதமாக கனிமத்திற்கு இப்பெயர் சூட்டப்பட்டது. [1]

இலின்னேயைட்டு
Linnaeite
இலின்னேயைட்டு மாதிரிகள்
பொதுவானாவை
வகைசல்ப்பைடு கனிமம்
தயோசிபைனல் குழு
சிபைனல் கட்டமைப்பு குழு
வேதி வாய்பாடுCo+2Co+32S4
இனங்காணல்
நிறம்எஃகு சாம்பல் முதல் உதா சாம்பல் வரை
படிக இயல்புஎண்முகப் படிகங்களாக; பொதி, மணிகள்
படிக அமைப்புகனசதுரம்
இரட்டைப் படிகமுறல்{111} இல்
பிளப்பு{001} இல் தெளிவற்று
முறிவுதுணை சங்குருவம்
மோவின் அளவுகோல் வலிமை4.5-5.5
மிளிர்வுஉலோகத்தன்மை
கீற்றுவண்ணம்சாம்பல் கருப்பு
ஒளிஊடுருவும் தன்மைஒளிபுகாது
ஒப்படர்த்தி4.8-5.8
Alters toகாற்றில் நிறமிழக்கும்
மேற்கோள்கள்[1][2][3]

நிக்கல் சல்பைடு கனிமமான பாலிடைமைட்டுடன் (Ni+2Ni+32S4) சேர்ந்து இலின்னேயைட்டு ஒரு தொடர்வரிசை கனிமங்களை உருவாக்குகிறது. [4] உலகெங்கிலும் கோபால்ட்டு மற்றும் நிக்கல் சல்பைடு கனிமங்களுடன் சேர்ந்து நீர்வெப்ப பகுதிகளில் இலின்னேயைட்டு காணப்படுகிறது. [3]

பன்னாட்டு கனிமவியல் சங்கம் இலின்னேயைட்டு கனிமத்தை Lin[5] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Linnaeite on Mindat
  2. Linnaeite data on Webmineral
  3. 3.0 3.1 Linnaeite on the Handbook of Mineralogy
  4. Linnaeite-Polydymite Series
  5. Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W. 
  • Schumann, Walter (1991). Mineralien aus aller Welt. BLV Bestimmungsbuch (2 ed.). p. 223. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-405-14003-X.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலின்னேயைட்டு&oldid=4091696" இலிருந்து மீள்விக்கப்பட்டது