இலின் நகர நிக்கோலசு

பிரித்தானிய வானியலாளர்

இலின்நகர நிக்கோலசு (Nicholas of Lynn) அல்லது இலின்னே (Lynne), அல்லது (இலத்தீன் மொழியில்) நிக்கோலசு தெ இலின்னா (Nicolas de Linna) ஒரு 14 ஆம் நுற்றாண்டு ஆங்கிலேய வானியலாளர் ஆவார்.

வாழ்க்கை

தொகு

நிக்கோலசு இலின் அரசர் பின்னர், இலின் பேராயர் துறைமுக நகராக விளங்கிய நார்த்போக்கில்1330 இல் மேலோட்டமாகப் பிறந்ததாகத் தோன்றினாலும் உறுதிபடுத்தப்பட்ட இவரது வாழ்க்கைப்பணி சார்ந்த தகவல்கள் இவர் 1360 வாக்கில் பிறந்துள்ளமைக்கான வாய்ப்பு நிலையை வழிமொழிகின்றன. மிக முந்தைய 1ஆம் நூற்றாண்டு வரலாற்றாசிரியரான பேல் கூற்றுப்படி, இவர் கார்மெலைட்டுத் துறவியாகி பலகலைக்கழக நகரான ஆக்சுபோர்டுக்கு இடம்பெயர்ந்தார். இங்கு, இவர் தனது அறிவியல் பணிக்காகப் பெரும்புசழ் பெற்றுள்ளார். இவர் 1386 இல் அன்று அதிகாரத்தில் கோலோச்சியிருந்த நிலக்கிழார் ஜான் கான்ட்டு அழைப்பின்பேரில், Kalendarium எனும் வானியல் அட்டவணைகளை வெளியிட்டார். இதில் 1387 முதல் 1462 வரையிலான விவரமான வானியல் தகவல் அடங்கியிருந்தம குறிப்பிடத்தக்கதாகும். [1] இந்த வானியல் அட்டவணை 16 கையெழுத்துப் படிகளாகவும் ஓர் அச்சுப்படியாகவும் இன்றும் கிடைக்கிறது.[2][1] காலம் சார்ந்த கணியவியல்(சோதிடம்) பார்க்க வடிவமைக்கப்பட்ட இவரது வானியல் அட்டவணைகள் மிக நுட்பமானவை. இதில் வானியல் சுழற்சிகளோடு ஒத்திசைவுள்ள மருத்துவம் மேற்கொள்வதற்கான விதிகளும் உள்ளடங்கியிருந்தன; குறிப்பாக நிலாவின் கலைகளை வைத்து குருதியேற்றலைக் குறிப்பிடலாம். இவரது சமகாலத்தில் வாழ்ந்த ஜியோப்பிரே சாசர் இவரை மிகவும் பாராட்டியதோடு இவரது கணியவியல் நடைமுறைகளைப் பயன்படுத்தவும் செய்தார்.[3][1] இவர் தலைசிறந்த இசை வல்லுனரும் ஆவார்.[சான்று தேவை] Later in life he moved to Cambridge, where he was promoted to subdeacon in 1410 and to deacon in 1411. The date of his death is unknown.[1]

தகைமை

தொகு

மிக முந்தைய வாழ்க்கை வரலாற்றியலாளர்களைப் பொறுத்தவரையில் புவித் தேட்டம் எதிலும் இவர் ஈடுபடவில்லை. இரிச்சர்டு காக்காக்லுய்த்து எனும் 16 நூற்றாண்டு புவிதேட்ட வரலாற்றியலாளர் தான் இவரை பிரான்சிசுக்கான் மினோரைட் குழுத் துறவியாகவும் கிரீன்லாந்துக்கும் அதற்கு அப்பாலும் சென்று அந்தப் பயண விவரங்களை Inventio Fortunata எனும் பனுவலில் எழுதி வெளியிட்டதாகவும் இனங்காண்கிறார். இவர் இத்தகவலைக் கணிதவியலாளரான ஜான் டீ வழியாகப் பெற்றிருக்கிறார். ஜான்டீ இத்தகவலை டட்சு நிலவரைவியலாளரான ஜெரார்டசு மெர்க்கார்ட்டரிடம் இருந்து பெற்றதாகக் கூறுகிறார்.[1] [4] நிக்கோலசு மினோரைட் துறவியல்ல, கார்மெலைட் துறவி ஆவார்; நிக்கோலசின் வான்கோளப் பணிக்கான சாசரின் பாராட்டைச் சாராமல், காகாக்லுய்த்தும் டீயும், பேலின் நூலைப் படித்திருந்தால், அயர்லாந்து நாட்டு குகு எனும் பிரான்சிசுக்கான் துறவி ஒருவர் குறிப்பிட்ட புவித்தேட்டப் பயணம் பற்றி ஒரு தொகுதியை எழுதியமையை அறிந்திருப்பர்.[சான்று தேவை]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 Eisner, Sigmund (2004). "Lynn, Nicholas (fl. 1386–1411)". Oxford Dictionary of National Biography. பார்க்கப்பட்ட நாள் 20 Aug 2017.
  2. Kuczynski, Michael P. (1987). "A New Manuscript of Nicholas of Lynn's ‘Kalendarium’: MS Chapel Hill 522, fols. 159r–202r". Traditio (43): 299–319. doi:10.1017/S0362152900012575. 
  3. Benson, C.D. (1984). "The Astrological Medicine of Chaucer's Physician and Nicholas of Lynn's Kalendarium". American Notes and Queries 22: 62–66. 
  4. Oleson, T.J. (1979). "Nicholas of Lynn". Dictionary of Canadian Biography. பார்க்கப்பட்ட நாள் 20 Aug 2017.

மேலும் படிக்க

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலின்_நகர_நிக்கோலசு&oldid=3955132" இலிருந்து மீள்விக்கப்பட்டது