இலியா சந்தை
பாக்கித்தான் நாட்டு சந்தை
இலியா சந்தை (Lea Market) பாக்கித்தான் நாட்டின் கராச்சி நகரத்தில் அமைந்துள்ள ஒரு சந்தையாகும். கராச்சி நகரத்தின் வளர்ச்சியில் பிரித்தானியப் பொறியியலாளர் மீசாம் லியா செய்த பங்களிப்புகளுக்காக சந்தைக்கு இவர் பெயரிடப்பட்டது.[1][2]
இலியா சந்தை
Lea Market لی مارکیٹ | |
---|---|
நாடு | பாக்கித்தான் |
மாகாணம் | சிந்து மாகாணம் |
நகரம் | கராச்சி |
நிறுவப்பட்டது | 1927 |
பெயர்ச்சூட்டு | மீசாம் இலியா |
இச்சந்தையில் உள்ள விற்பனையாளர்கள் பால் பொருட்கள், மீன், இறைச்சி மற்றும் காய்கறிகளை விற்கின்றனர்.[3] சந்தையில் பழைய மணிக்கூண்டு ஒன்றும் உள்ளது.[4]
வரலாறு
தொகுஇலியா சந்தை 1927 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. பிரித்தானியப் பொறியாளர் மீசாம் இலியாவின் பெயர் சந்தைக்கு சூட்டப்பட்டுள்ளது.[3] ஒரு காலத்தில் நகரின் முக்கிய வர்த்தக மையமாகவும் இது இருந்தது.[3]
முதலில், சந்தை மூன்று இரண்டு மாடி கட்டிடங்களைக் கொண்டிருந்தது. அயூப் கானின் ஆட்சியின் போது இறைச்சி விற்பனையாளர்களுக்கு இடமளிக்க கூடுதல் கட்டிடம் பின்னர் சேர்க்கப்பட்டது.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "KARACHI: Lea Market losing its past glory". 11 November 2008.
- ↑ "مصر کے اوسیرس بازار سے کراچی کی لی مارکیٹ تک". 23 April 2021.
- ↑ 3.0 3.1 3.2 3.3 "How government apathy turned the grand Lea Market into a flea market". 26 November 2019.
- ↑ "لی مارکیٹ کا خاموش گھنٹہ گھر جس کی سوئیاں اب ساکت ہیں".