இலியோனார்டு பார்க்கர்
இலியோனார்டு இம்மானுவேல் பார்க்கர் ( பிறப்பு:1938) இயற்பியலின் புகழ்பெற்ற பேராசிரியரும் , விசுகான்சின் - மில்வாக்கி பல்கலைக்கழகத்தில் ஈர்ப்பு மற்றும் அண்டவியல் மையத்தின் முன்னாள் இயக்குநரும் ஆவார். 1960களின் பிற்பகுதியில் பார்க்கர் இயற்பியலின் ஒரு புதிய பகுதியான வளைந்த காலவெளித் தொடர்மத்தில் குவையப் புலக் கோட்பாட்டை நிறுவினார். குறிப்பாக , மாறிவரும் ஈர்ப்புப் புலத்தில் குவையப் புலக் கோட்பாட்டிற்கு போகோலியுபோவ் உருமாற்றங்களின் நுட்பத்தைப் பயன்படுத்துவதனால் , அவர் இப்போது அண்டவியல் துகளாக்கம் என்று அழைக்கப்படும் இயற்பியல் பொறிமுறையைக் கண்டுபிடித்தார். அவரது கண்டுபிடிப்பு ஒரு ஆச்சரியமான விளைவைக் கொண்டுள்ளது. புடவியின் விரிவாக்கமே வெற்றிடத்திலிருந்து துகள்களை உருவாக்க முடியும். அவரது பணி நூற்றுக்கணக்கான இயற்பியலாளர்களின் ஆராய்ச்சிக்கு ஊக்கமளித்தது. மேலும், 2,000 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட ஆராய்ச்சி ஆவணங்களில் சான்று காட்டப்பட்டுள்ளது. இது சோவியத் இயற்பியலாளர் ஆந்திரி சாகரோவின் நினைவுக் குறிப்புகளில் பாராட்டப்பட்டது. அதோடு, கருந்துளைகளால் துகள்கள் உருவானதைக் கண்டறிய சுட்டீவன் ஆக்கிங்கிற்கு உதவியது.
இலியோனார்டு இ. பார்க்கர்
Leonard E. Parker | |
---|---|
பிறப்பு | 1938 ( அகவை 84–85) நியூயார்க் நகரம், ஐக்கிய அமெரிக்கா
|
முனைவர் ஆய்வு | ஆர்வர்டு பல்கலைக்கழகம் |
அரியப்படுவது | வளைந்த காலவெளித் தொடர்மத்தில் குவையப் புலக் கோட்பாடு |
அறிவியல் தொழில் | |
களங்கள் | குவைய இயற்பியல் |
நிறுவனங்கள் | விசுகான்சின் பல்கலைக்கழகம், மில்வாக்கி |
முனைவர் ப்ட்ட அறிவுரைஞர் | சிட்னி கோல்மேன் |
முனைவர் பட்ட மாணவர்கள் | பிரகாசு பனங்கடன் |
நியூகேஸில் பல்கலைக்கழகத்தின் டேவிடு டாம்சுடன் இணைந்து , வளைந்த காலவெளியில் குவையப் புலக் கோட்பாடு குறித்த பட்டதாரி நிலை பாடப்புத்தகங்களுக்கு பார்க்கர் இணைந்து நூல் எழுதியுள்ளார் , வளைந்த காலவெளி தொடர்மத்தில் குவையப் புலக் கோட்பாடு: குவையமயப் புலங்களும் ஈர்ப்பும் (கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக அச்சகம், 2009) ISBN .
1967 ஆம் ஆண்டில் ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். அவரது வழிகாட்டி சிட்னி கோல்மேன் ஆவார்.
விருதுகளும் தகைமைகளும்
தொகு- 1984 இல் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆய்வுறுப்பினர், அமெரிக்க இயற்பியல் கழகம்
- 2000 பார்க்கர் கருத்தரங்கம்