இலூயிசு போல்கு

டச்சு நாட்டைச் சேர்ந்த உடற்கூற்றியல் அறிஞர்

இலோத்வியிக் இலூயிசு போல்கு (Lodewijk 'Louis' Bolk) டச்சு நாட்டைச் சேர்ந்த ஓர் உடற்கூறியல் நிபுணர் ஆவார். 1866 ஆம் ஆன்டு டிசம்பர் மாதம் 10 ஆம் தேதியன்று இவர் இராட்டர்டாம் நகரத்தில் பிறந்தார். மனித உடல் பற்றிய கருத்தரித்தல் கோட்பாட்டை போல்கு உருவாக்கினார். [1] உதாரணமாக இக்கோட்பாட்டின்படி ஒரு மனிதன் பிறக்கும்போது, இன்னும் ஒரு கருவாகவே இருக்கிறான். விகிதாசார அளவில் பெரிய தலை, ஒருங்கிணைக்கப்படாத இயக்கம் அல்லது அதன் முழுமையான உதவியற்ற தன்மை ஆகியவற்றை ஒருவர் கவனம் செலுத்தினால் பார்க்க முடியும். மேலும், இந்த முன்கூட்டிய முதிரா நிலையை குறிப்பாக மனித இனத்தில் மட்டும் காண இயலும்.

இலூயிசு போல்கு.

போல்க் மனிதனின் இனப் பண்புகளின் தோற்றம் [2] குறித்து எழுதினார். வெள்ளை தோல் ... என்பது மூதாதையரிடமிருந்து ஒரு கருப்பு தோலுடன் தொடங்கியது என்கிறார். இதன் விளைவாக முடி மற்றும் கருவிழி நிறம் போன்றவையும் மேலும் மேலும் அடக்கப்பட்டன.

இலூயிசு போல்கின் கருத்தரித்தல் கோட்பாட்டின் அடிப்படையில் கை அளவீடுகள்

மேற்கோள்கள்

தொகு
  1. Verhulst, J. (1993). "Louis Bolk revisited II—Retardation, hypermorphosis and body proportions of humans". Medical Hypotheses 41 (2): 100–114. doi:10.1016/0306-9877(93)90054-T. பப்மெட்:8231987. 
  2. Bolk, L. (1929). "Origin of racial characteristics in man" (in en). American Journal of Physical Anthropology 13 (1): 1–28. doi:10.1002/ajpa.1330130123. பன்னாட்டுத் தர தொடர் எண்:1096-8644. https://onlinelibrary.wiley.com/doi/abs/10.1002/ajpa.1330130123. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலூயிசு_போல்கு&oldid=3228255" இலிருந்து மீள்விக்கப்பட்டது