இலெகோண்டைட்டு
இலெகோண்டைட்டு (Lecontite) என்பது (NH4,K)NaSO4·2H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். சோடியம் அமோனியம் சல்பேட்டு இருநீரேற்றுடன் அமோனியாவிற்குப் பதிலாக பொட்டாசியம் பதிலீடு செய்யப்பட்ட குறிப்பாக நான்கில் ஒரு பங்கு பொட்டாசியம் உள்ள கனிமமாக இக்கனிமம் கருதப்படுகிறது.[1]) இது ஒரு சல்பேட்டு வகை கனிமமாகும். ஓண்டுராசு நாட்டில் உள்ள லாசு பீட்ராசு குகையில் இயான் லாரன்சு இலெகோண்டே என்பவரால் ஒரு அங்குல நீளமுள்ள படிகங்கள் உட்பட வௌவால் கழிவுகளின் சிதைவுப் பொருளாக இது கண்டறியப்பட்டது. 1858 ஆம் ஆண்டில் டபிள்யூ.இயே. டெய்லரால் தனி கனிமமாக அடையாளம் காணப்பட்டது.[3] 1963 ஆம் ஆண்டு நிலவரப்படி, பெரும்பாலான இயற்கை மாதிரிகள் அதே குகையில் இருந்து வந்தவையாகும்.[4]
இலெகோண்டைட்டு Lecontite | |
---|---|
பொதுவானாவை | |
வகை | சல்பேட்டு கனிமம் |
வேதி வாய்பாடு | (NH4,K)NaSO4·2H2O |
இனங்காணல் | |
நிறம் | நிறமற்றது |
படிக அமைப்பு | நேர்ச்சாய்சதுரம் |
பிளப்பு | {011} தனித்துவம் [1] |
மோவின் அளவுகோல் வலிமை | 2–2.5 |
மிளிர்வு | பளபளப்பு முதல் மங்கல் வரை |
கீற்றுவண்ணம் | வெண்மை |
ஒளிஊடுருவும் தன்மை | ஒளிபுகும் மற்றும் ஒளிகசியும் |
ஒப்படர்த்தி | 1.745 கி/கன செ.மீ[2] |
அடர்த்தி | 1.745 கி/கன செ.மீ |
ஒளிவிலகல் எண் | nα = 1.440 nβ = 1.454 nγ = 1.455[2] |
இரட்டை ஒளிவிலகல் | δ = 0.015[2] |
அம்மோனியம் சல்பேட்டுடன் நீரிய கரைசலிலுள்ள சோடியம் சல்பேட்டைச் சேர்த்து கரைசலை வினைபுரியச் செய்து படிகமாக்குவதன் மூலம் இலெகோண்டைட்டை எளிதில் தயாரிக்கவும் முடியும்.[5]
பன்னாட்டு கனிமவியல் சங்கம் இலெகோண்டைட்டு கனிமத்தை Lcn[6] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Lecontite Mineral Data". Webmineral. பார்க்கப்பட்ட நாள் 2022-04-15.
- ↑ 2.0 2.1 2.2 "Lecontite". Mindat.
- ↑ Taylor, W.J. (1858). "Lecontite, a new mineral". American Journal of Science and Arts 76: 273–274.
- ↑ Faust, Robert J.; Bloss, F. Donald (1963). "X-ray study of lecontite". American Mineralogist 48 (January–February): 180–188. https://pubs.geoscienceworld.org/msa/ammin/article-abstract/48/1-2/180/542037/X-ray-study-of-lecontite.
- ↑ Shintyakov, Dmitry. "Sodium ammonium sulfate". DmiShin home, crystal growing collection. பார்க்கப்பட்ட நாள் 2022-04-15.
- ↑ Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W.