இலெக்ராண்டைட்டு
இலெக்ராண்டைட்டு (Legrandite) என்பது Zn2(AsO4)(OH)·(H2O) என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். துத்தநாக ஆர்சனேட்டு கனிமமாக இது வகைப்படுத்தப்படுகிறது.
இலெக்ராண்டைட்டு Legrandite | |
---|---|
பொதுவானாவை | |
வகை | ஆர்சனேட்டு கனிமம் |
வேதி வாய்பாடு | Zn2(AsO4)(OH)·(H2O) |
இனங்காணல் | |
நிறம் | பிரகாசமான மஞ்சள், மெழுகு மஞ்சள், நிறமற்றது |
படிக இயல்பு | படிக, பட்டகத் திரட்சிகள் |
படிக அமைப்பு | ஒற்றைச்சரிவச்சு |
பிளப்பு | சமமற்றது, தெளிவற்றது {100} |
முறிவு | சங்குருவம் |
விகுவுத் தன்மை | நொறுங்கும் |
மோவின் அளவுகோல் வலிமை | 4.5–5 |
மிளிர்வு | பளபளக்கும் |
கீற்றுவண்ணம் | வெண்மை |
ஒளிஊடுருவும் தன்மை | ஒளிபுகும் , ஒளி கசியும் |
ஒப்படர்த்தி | 3.98–4.01 |
ஒளியியல் பண்புகள் | ஈரச்சு (+) |
ஒளிவிலகல் எண் | nα = 1.675 – 1.702 nβ = 1.690 – 1.709 nγ = 1.735 – 1.740 |
இரட்டை ஒளிவிலகல் | δ = 0.060 |
பலதிசை வண்ணப்படிகமை | X = Y = நிறமற்றது முதல் மஞ்சள் Z = மஞ்சள் |
2V கோணம் | அளக்கப்பட்டது: 50° |
மேற்கோள்கள் | [1][2][3] |
பன்னாட்டு கனிமவியல் சங்கம் இலெக்ராண்டைட்டு கனிமத்தை Leg[4] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.
ஆர்சனிக்கு கலந்துள்ள துத்தநாகப் படிவுகளின் ஆக்சிசனேற்ற மண்டலத்தில் இது ஓர் அசாதாரணமான இரண்டாம் நிலை கனிமமாகும். கிராணைட்டு வகை பெக்மாடைட்டு பாறைகளில் அரிதாகவே காணப்படுகிறது. அடமைட்டு, பாராடமைட்டு, கோட்டிகைட்டு, சிகோரோடைட்டு, இசுமித்சோனைட்டு, லைட்டீட்டு, ரெனைரைட்டு, பார்மகோசிடெரைட்டு, ஆரிசல்சைட்டு, சிடெரைட்டு, கோதைட்டு பைரைட்டு ஆகிய கனிமங்களுடன் கலந்து காணப்படுகிறது. நமீபியாவின் திசுமேபு நகரம், மெக்சிகோவின் துராங்கோ மாநிலத்தில் உள்ள ஒச்சூவேலா சுரங்கம், அமெரிக்காவின் நியூ செர்சி மாநில சுடெர்லிங்கு இல் சுரங்கம் ஆகிய இடங்களில் கிடைக்கிறது.[1][2]
முதன்முதலில் 1934 ஆம் ஆண்டில் மெக்சிகோவின் நியூவோ லியோன் மாநிலத்திலுள்ள புளோர் டி பெனா சுரங்கத்தில் இலெக்ராண்டைட்டு கண்டறியப்பட்டது. இலூயிஸ் சி.ஏ. இலெக்ராண்ட்டு ஒரு பெல்ச்சிய நாட்டு சுரங்கப் பொறியாளர் ஆவார். இவர் நினைவாக கனிமத்திற்கு இலெக்ராண்டைட்டு எனப் பெயரிடப்பட்டது.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Handbook of Mineralogy
- ↑ 2.0 2.1 2.2 Mindat.org
- ↑ Webmineral
- ↑ Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W. https://www.cambridge.org/core/journals/mineralogical-magazine/article/imacnmnc-approved-mineral-symbols/62311F45ED37831D78603C6E6B25EE0A.