இலைமன்-ஆல்ஃபா வரி
இலைமான் - ஆல்பா வரி என்பது லைமான் தொடரில் உள்ள நீரகத்தின் கதிர்நிரல் வரி ஆகும். பொதுவாகவ் நீரக் அணுவின் ஏதாவதொரு மின்னனின் கதிர்நிரல் வரி ஆகும். அணுவின் ஒரு மின்னன் n = 2 சுற்றுப்பாதையில் இருந்து தரை நிலைக்கு(n = 1) மாறும்போது இது வெளியிடப்படுகிறது இங்கு n என்பது முதன்மை குவைய எண். நீரகத்தில் அதன் அலைநீளம் 1215.67 ஆங்ஸ்ட்ரோம்கள் (121.567 nm அல்லது 1.21567′10′7 m′) ஆகும். இதன் அலைவெண் 2.47′1015 2.47×1015 ஆகும். இது இலைமான் ஆல்பா வரியை புற ஊதா பகுதியில் (மின்காந்த நிரலின் ஒரு பகுதி) வைக்கிறது. மேலும் குறிப்பாக Ly - α என்பது வெற்றிட புற ஊதா பகுதியில் உள்ளது , இது காற்றில் வலுவாக உறிஞ்சப்படுகிறது.