இலையுதிர் காடுகள்

இலையுதிா் காடுகள்

தொகு

இக்காடுகள் துணை வெப்ப மண்டலத்திலும் மித வெப்பமண்டலத்திலும் அமைந்துள்ளன. இம்மண்டலங்களில் கோடை காலம் வெப்பமாகவும் குளிா்காலம் மிகவும் குளிராகவும் இருக்கும். இவ்விரண்டு மண்டலங்களிலும் ஒராண்டில் சில மாதங்கள் மட்டுமே மழை பெய்யும். எனவே இவ்விரண்டு மண்டலங்களிலும் பருவ காலங்கள் ஏற்படுகின்றன. ஆகையால் துணைவெப்ப மண்டலத்தில் கோடை காலத்திலும், மிதவெப்ப மண்டலத்தில் குளிா்காலத்திலும் மரங்கள் தங்கள் இலைகளை உதிா்த்து விடுகின்றன. இந்தியா போன்ற பருவக்காற்று நாடுகளில் கோடை காலத்தில் நீண்ட வரண்ட காலநிலையின் காரணமாக அனைத்து தாவரங்களும் இலைகளை உதிா்த்து விடுகின்றன. இத்தகைய துணைவெப்ப மண்டல காடுகள் பருவக்காற்றுக் காடுகள் எனப்படுகின்றன. இது இந்தியாவில் இமயமலை அடிவாரத்தின் மேற்குப் பகுதியில் உள்ளது.

இலையுதிா் தாவரங்கள்

தொகு

தேக்கு, சால், செம்மரம், சந்தன மரம், மூங்கில்.

 
இலையுதிா்காடுகள்.
 
தேக்கு.
 
மூங்கில்.
 
சந்தனம்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலையுதிர்_காடுகள்&oldid=3638037" இலிருந்து மீள்விக்கப்பட்டது