இல்லீரியா
பாரம்பரியக் காலத்தில், இல்லீரியா (Illyria, பண்டைக் கிரேக்கம்: Ἰλλυρία , இல்லியா அல்லது Ἰλλυρίς , இல்லிரிஸ் ; [1] [2] ) என்பது பால்கன் தீபகற்பத்தின் மேற்குப் பகுதியில் பல பழங்குடியின மக்கள் வசித்த ஒரு பகுதி ஆகும். இல்லீரியன்கள் இந்தோ-ஐரோப்பிய மொழியான இலிரியன் மொழியைப் பேசினர். இது பண்டைய காலங்களில் தெற்கு இத்தாலியின் சில பகுதிகளில் பேசுப்பட்டதாக இருக்கலாம். [3] புவியியலில் இல்லீரிஸ் ( இல்லிரியாவில் இருந்து வேறுபட்டது) என்பது சில சமயங்களில் வடக்கு மற்றும் நடு அல்பேனியாவின் அயோஸ் பள்ளத்தாக்கு வரையிலான பகுதியை வரையறுக்கப் பயன்படுத்தப்பட்டது, பெரும்பாலான காலகட்டங்களில் லேக்லேண்ட் பகுதி உள்ளிட்டப் பகுதியைக் குறிப்பிட பயன்படுத்தப்பட்டது. [4] [5] ரோமானிய காலங்களில் Illyria / Illyris / Illyricum என்ற சொற்கள் தென்-கிழக்கு ஏட்ரியாட்டிக் கடற்கரை (நவீன அல்பேனியா மற்றும் மொண்டெனேகுரோ ) மற்றும் தன்யூபு, மற்றும் அட்ரியாட்டிக்கின் மேல் பகுதியிலிருந்து ஆர்டியாயி வரையிலான பகுதிகளைக் குறிப்பிட பயன்படுத்தப்பட்டது. [6] [7] [8] கிமு முதல் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்து ரோமானியர்களால் இலிரிகம் என்ற சொல் பேரரசின் மாகாணத்திற்கு பயன்படுத்தப்பட்டது. இது டிரின் ஆற்றின் வடக்கே கிழக்கு அட்ரியாடிக் கடற்கரைவரை பரவியிஉந்தது. அதன் தெற்கே ரோமானிய மாகாணமான மாசிடோனியாவின் எல்லை . தொடங்கியது. [6]
இல்லீரியா | |
---|---|
வரலாற்று பிராந்தியம் | |
பாரம்பரியக் காலத்தின் போது இல்லீரியன் பழங்குடியினர் குடியேறிய தோராயமான பகுதி | |
பகுதி | தென்கிழக்க ஐரோப்பா |
பிராந்தியம் | பால்கன் குடா |
குறிப்புகள்
தொகு- ↑ Illyría and Illyrís respectively
- ↑ Polybius. Histories, 1.13.1.
- ↑ If the Messapian language was close enough to the Illyrian language to be considered an Illyrian dialect, then Illyrian would also have been spoken in southern Italy.
- ↑ Boardman 1982.
- ↑ Hammond 1982.
- ↑ 6.0 6.1 Wilkes 1995.
- ↑ Kos 2012.
- ↑ Dzino 2014.