இளக்கி
உலோகவியலில், இளக்கி (flux) என்பது உலோகங்களை உருக்கிப் பிரிக்கும்போது பயன்படுத்தப்படும் ஒரு பொருள். உலோகக் கனிமங்களை வெட்டி எடுக்கும்போது அவற்றுடன் தேவையற்ற பாறைப் பொருள்கள் கலந்திருக்கும். இத்தாது உப்புகள், கனிமச் செறிவூட்டலுக்குப் பின்னரும் மிகுந்திருக்கும். எனவே இத்தாது உப்புகளைப் பிரித்தெடுக்க வேண்டியுள்ளது. உலோகவியலில் இத்தகைய தாது உப்புகளைப் பிரித்தெடுப்பதற்காக இளக்கி பயன்படுத்தப்படுகிறது. இளக்கியைத் தாதுக்களுடன் சேர்த்து வெப்பப்படுத்தும்போது அது படி எச்சத்துடன் சேர்ந்து கழிவுப் பொருளாக மாறுகிறது. உருகிய நிலையில் இருக்கும் இக்கழிவுப் பொருள்கள் மிகுதியான வெப்பநிலையில் உருகிய உலோகத்துடன் கலக்காமல் தனியே பிரிந்து மேலே மிதக்கும். பின்னர் இவை உலையிலிருந்து வெளியேற்றப்படும். எவ்வகையான கழிவுப் பொருள்களை நீக்க வேண்டுமோ அவற்றைப் பொறுத்து இளக்கியும் வேறுபடும்.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ அறிவியல் களஞ்சியம் தொகுதி 5
வெளி இணைப்புகள்
தொகு- MetalShapers.Org Tips & Tricks from the Pros: ''Aluminum Welding" (includes Filler Metal chart)
- Solder Fume and You