இளங்கண்டீரக்கோ

இளங்கண்டீரக்கோ என்பவன் கண்டீரக்கோப்பெருநள்ளியின் தம்பி. கண்டீரக்கோப்பெருநள்ளி கடையெழு வள்ளல்களில் ஒருவன். நள்ளி எனச் சுருக்கமாகக் குறிப்பிடப்படுபவன். இளங்கண்டீரக்கோ தன் நண்பனான இளவிச்சிக்கோவுடன் விச்சிமலைநாட்டு அரண்மனையில் இருந்தான். அப்போது புலவர் வன்பரணர் அங்குச் சென்றார். இந்த இளங்கண்டீரக்கோவைத் தழுவினார். இளவிச்சிக்கோவைத் தழுவவில்லை. இவனை தழுவியதற்குக் காரணம் வள்ளலின் தம்பி என்பதாலாம். அவனைத் தழுவாமைக்குக் காரணம் அவன் வள்ளல்தன்மையே சிறிதுமில்லாத நன்னன் ஒருவனின் மகளை மணந்துகொண்டு அந்த நன்னன் மருகனாய் இருந்ததுதானாம்.

சான்று தரும் பாடல் -- வன்பரணர் - புறநானூறு 149
"https://ta.wikipedia.org/w/index.php?title=இளங்கண்டீரக்கோ&oldid=4132436" இலிருந்து மீள்விக்கப்பட்டது