இளநிலை பார்வை அளவையியல்
இளநிலை பார்வை அளவையியல் (Bachelor of Optometry) என்பது பார்வை அளவையியல் துறையில் வழங்கப்படும் நான்கு ஆண்டு பட்டப் படிப்பு ஆகும். ஓர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பார்வை அளவையியல் பள்ளியில் படித்து பட்டம் பெற்றவுடன் வழங்கப்படுகிறது.[1] கண் மற்றும் அதனுடன் இணைந்த உறுப்புகள், ஒளிவிலகல் பிழைகளை சரிசெய்தல், கண் நோய்களுக்கான சிகிச்சை மற்றும் மேலாண்மை தொடர்பான அறிவை பெறும் வகையில் இப்பட்டப் படிப்பின் பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. நான்கு வருட கல்வி கற்றலும் ஒரு கண் பராமரிப்பு மையத்தில் ஒரு வருட மருத்துவப் பயிற்சியையும் உள்ளடக்கியதே இளநிலை பார்வை அளவையியல் படிப்பாகும். கண் சிகிச்சை நிபுணர் என்று அழைக்கப்படுவதற்கும், உலகின் பல நாடுகளிலும் பார்வை மருத்துவப் பயிற்சி செய்வதற்கும் இந்தப் பட்டம் ஒரு குறைந்தபட்ச தகுதியாகும்.[2]
இளநிலை பார்வை அளவையியல் பட்டம் தற்போது ஆத்திரேலியா, வங்காளதேசம், பிரேசில், இந்தியா, நேபாளம், ஓமன் போன்ற நாடுகளில் வழங்கப்படுகிறது.[3]