இளந் தேவனார்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இளந்தேவன1ர் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். நான்கு பாடல்கள் அவர் பாடியனவாகச் சங்கநூல்களில் காணப்படுகின்றன. அவை அகநானூறு 58, 298, 328, நற்றிணை 41 ஆகியவை.
பாடல் தரும் செய்திகள்
தொகுஅகநானூறு 58
தொகு- இது குறிஞ்சித்திணைப் பாடல்
தலைவன் தலைவியை அவள் வீட்டிலிருந்து வெளியிடத்துக்கு அழைத்துவந்து அவளைத் துய்க்கிறான். தலைவி மகிழ்கிறாள். பின் தலைவி தலைவனிடம் கூறுகிறாள்.
என் வளைக்கையால் உன்னை வளைத்துக்கொண்டேன். நீ என் மார்பகம் அமுங்கும்படி புல்லினாய். இனிமையாக உள்ளது. ஆனால் வீட்டுக்குப் போனபின் வாடைக் காற்று வீட்டு மரத்தை வளைத்துக் கொண்டு வீசும்போது எல்லாரும் புலித்தோல் படுக்கையில் உறங்கும்போது நான் உன்னை நினைக்கும்போது நான் நலிவதை எண்ணிப் பார்ப்பாயா?
இது பாடல் தரும் செய்தி.
பழக்கம்
தொகு- 'வரி அதள் படுத்த சேக்கை'
கூதிர் காலத்தில் குறிஞ்சிநில மக்கள் வரிப்புலித் தோலில் உறங்குவர்.
அகநானூறு 298
தொகு- இது குறிஞ்சித்திணைப் பாடல்
யானை நடமாடும் நள்ளிரவில் நள்ளிரவில் தலைவன் வந்தான். தலைவியின் தாயும் தந்தையும் உறங்கவில்லை. தலைவிக்கு இது இனிமையானதுதான். என்றாலும் அவள் உயங்குகிறாள். இது பாடல் தரும் செய்தி.
தொல்காப்பியம்
தொகு'உயாவே உயங்கல்' என்பது தொல்காப்பியம். உயா = உயிர்ப்பு இல்லாமல் (பேச்சு மூச்சு காட்டாமல்) மனம் வருந்தல். உயங்கல் = உடல் படும் துன்பம். (தொல்காப்பியம் உரியியல் 71)
உவமை
தொகுகடலில் ஞாயிறு தோன்றுவது போல வேங்கை மரம் பூத்துக் குலுங்கும்.
அகநானூறு 328
தொகு- இது குறிஞ்சித்திணைப் பாடல்
மூங்கிலைத் தின்ற பெண்யானை வாழைத் தோப்பில் தூங்கும்போது ஆண்யானை தடவிக்கொடுக்கும். அது போல நள்ளிரவில் வந்த தலைவன் தலைவியை அணைத்துக்கொண்டான். அவளை முயங்க முயங்க இன்பம் அள்ளுகிறது - என்கிறான் தலைவன். இது பாடல் தரும் செய்தி.
பழந்தமிழ்
தொகுபாடலில் காணப்படும் பழந்தமிழ்ச் சொற்களில் சில.
- துனி = ஊடலின் உச்சக் கட்டம்
- நண்பு = ஆண் பெண் உறவால் அமைந்த தொடர்பு, நட்பு = தோழமைத் தொடர்பு
- தெற்றாகுதல் = தெளிவாகுதல்
- நற்கு = நன்கு
நற்றிணை 41
தொகுஇது பாலைத்திணைப் பாடல். தலைவன் பொருள் தேடச் செல்ல விழைகிறான். தலைவி ஒப்புதல் தர விரும்பவில்லை. தோழி உலகியலைக் கூறித் தலைவியை ஏற்றுக்கொள்ளுமாறு செய்கிறாள்.
தோழி! நீ நெய் ஊற்றிச் சமைப்பாய். அப்போது உன் நெற்றி வேர்க்கும். அந்த வேர்வையை நீ உன் நெய்க்கையால் துடைத்துக்கொள்வாய். நெய்யோடு கூடிய அந்த நெற்றி வியர்வை அவருக்கு மிக விருப்பம். பொருள் தேடச் சென்ற காட்டில் யானை கலக்கிய சேற்று நீரை உண்ணும் அவர் உன் நெற்றி வேர்வையைச் சுவைக்க வந்துவிடுவார். கவலை வேண்டாம் என்கிறாள் தோழி.