இளம்போதியார்

இளம்போதியார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடலாகச் சங்கநூல் தொகுப்பில் ஒரே ஒரு பாடல் நற்றிணை பாடல் எண் 72 ஆக உள்ளது.

பெயர் விளக்கம்

தொகு

போதனார் என்னும் பெயருடன் சங்ககாலப் புலவர் ஒருவர் உள்ளார். போதனார் என்பது ஆண்பாற்பெயர். போதியார் என்பது பெண்பாற்பெயர். போது என்னும் சொல் மலர்ந்துகொண்டிருக்கும் குறிக்கும். இந்தச் சொல்லைக்கொண்டு அமைந்த பெயர் இவை.

பாடல் தரும் செய்தி

தொகு

நெய்தல் திணைப் பாடல் இது. அவன் வருகிறான். அவள் தன்னைத் தருகிறாள். அவன் நட்பு அவளுக்கு உயிர் போன்றது. நட்பு தொடர்கிறது. தாய்க்குத் தெரியவருமே, ஆயத்தார் அறிந்து பேசுவார்களே என்று எண்ணித் தோழி அஞ்சுகிறாள். அவன் வீட்டுக்கு வெளியே காத்திருக்கிறான். தோழி அவளுக்குச் சொல்கிறாள்.

அவர் பேணுவாரோ, பேணமாட்டாரோ என்று எண்ணாமல் நீ உன்னளை அவனுக்குத் தருகிறாய். இது நாணத்தக்க செயல் அன்று. அவன் உன்னை விட்டுப் பிரியமாட்டான். எனினும் நான் தாய்க்காக அஞ்சுகிறேன். நீங்கள் கானலில் விளையாடும்போது ஆயம் அறிந்து அலர் தூற்றுமே என்று அஞ்சுகிறேன், என்கிறாள். இது அவளிடம் சொல்லப்பட்டாலும். அவன் கேட்டு அவளை மணந்துகொள்ள வேண்டும் என்பது பொருள்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இளம்போதியார்&oldid=4132449" இலிருந்து மீள்விக்கப்பட்டது