இளவந்தி ஊராட்சி
இது தமிழகத்தில் திருப்பூர் மாவட்டத்தில் காமநாயக்கன் பாளையம் வட்டாரத்தில் அமைந்துள்ளது.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இளவந்தி வடுகபாளையம் ஊராட்சி என்பது தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் ஊராட்சி ஆகும். இது பொங்கலூர் (தற்போது பல்லடம் சட்டமன்ற தொகுதி) சட்டமன்ற தொகுதிக்கும் திருப்பூர் மக்களவை தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்ளாட்சி தேர்தலில் மூலம் 6 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.இந்த ஊராட்சி காமநாயக்கன் பாளையம் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்டதாகும்.
மக்கள் தொகை
தொகு2011ம் ஆண்டு தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி இந்த ஊராட்சியில் 1,649 பேர் வசிக்கின்றனர். இதில் ஆண்கள் 48% பேரும் பெண்கள் 52% பேரும் வசிக்கின்றனர்.
போக்குவரத்து
தொகுஇந்த ஊராட்சியின் பெரும்பாலும் குறிப்பிட்ட நேரத்தில் தான் பேருந்து இயக்கப்படுகின்றன. குறிப்பாக பல்லடம் , கேத்தனூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு போக்குவரத்து வசதி உள்ளது
பகுதிகள்
தொகு- பழைய இளவந்தி (மேற்கு)
- புதிய இளவந்தி (கிழக்கு)
- ஆதிதிராவிடர் காலணி
நிர்வாகம்
தொகு- இந்த ஊராட்சியில் பெரும்பாலும் விவசாய குடும்பங்கள் உள்ளன.
- பெரும்பாலும் விவசாயத்தை நம்பியும் கூலி தொழிலை நம்பியும் உள்ளனர்
- இளவந்தி வடுகபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அமைந்துள்ளது.
- அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது.