இளையராஜாவின் திருவாசகம்

இளையராஜாவின் திருவாசகம் (Thiruvasagam by Ilayaraaja) என்பது, இளையராஜா ஆரட்டோரியோ (Oratorio) எனும் இசை வடிவில் வெளியிட்டுள்ள இசைத் தொகுப்பு ஆகும்.[1]

இளையராஜாவின் திருவாசகம்
Soundtrack
வெளியீடு30 சூன் 2005 (2005-06-30)
இசைப் பாணிஆரட்டோரியோ
நீளம்1:42:45
மொழிதமிழ்
இசைத் தயாரிப்பாளர்இளையராஜா
மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு மற்றும் கலாச்சார அமைச்சர் ஜெய்பால் ரெட்டி, இளையராஜாவின் திருவாசகம் ஒளிநாடவை சென்னையில் சுன் 30,2005 அன்று வெளியிட்டார்

திருவாசகப் பாடல்கள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. இப்பாடல்களை ஸ்டீஃபன் ஷ்வார்ட்ஸ் (Stephen Schwartz) ஆங்கில வரிகளாக மொழி பெயர்த்துள்ளார். திருவாசகத்தின் சில பகுதிகளை , இளையராஜா, பவதாரிணி மற்றும் குழுவினர் பாடியுள்ளனர்.

ஹங்கேரியின் பாரம்பரியமிக்க புடாபெஸ்ட் பில்ஹார்மானிக் ஆர்கெஸ்டிரா குழுவினர் நூற்றுக்கணக்கான வயலின்களும், மேற்கத்திய வாத்தியங்களும் சேர்த்து இப்பாடல்களுக்கு இசை அமைத்திருக்கின்றனர்.

சான்றுகள்

தொகு
  1. Viswanathan, S. https://frontline.thehindu.com/arts-and-culture/music/article30205640.ece. பார்த்த நாள்: 12 சுன் 2020. 

வெளி இணைப்புகள்

தொகு