பாய்ம இயக்கவியலில், இழுவை (drag) (சில நேரங்களில் காற்றுத்தடை அல்லது நீர்ம எதிர்ப்பு) விசையானது பாய்மத்தினூடாக (திரவம் அல்லது காற்று) ஒரு பொருளின் இயக்கத்தை எதிர்க்கும் விசையாகும். இவ்விசை பாய்மத் திசைவேகத்திற்கு எதிர்த் திசையில் இருக்கும். மற்ற எதிர்ப்பு விசைகளைப் போலன்றி இவ்விசை திசைவேகத்தைப் பொறுத்து மாறுபடும்.

வடிவமும்
ஓட்டமும்
உரு/வடிவ
இழுவை
புறணி
உராய்வு
0% 100%
~10% ~90%
~90% ~10%
100% 0%

ஒரு திடப் பொருள் பாய்மத்தில் சென்றுகொண்டிருக்கும்போது, இழுவை விசை , மொத்த காற்றியக்க அல்லது நீர்மையியக்க விசையில் பொருளின் திசைவேகத்திற்கு எதிர்த் திசையில் இருக்கும் பாகமாகும். ஆனால், ஏற்றம் என்பது அவ்விசையில், பாய்மம் பாயும் திசைக்கு செங்குத்தாக இருக்கும் பாகத்தைக் குறிப்பதாகும். ஆகவே இழுவை விசை பொருளின் இயக்கத்தை எதிர்க்கிறது.

குறிப்புதவிகள்

தொகு

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இழுவை&oldid=3581934" இலிருந்து மீள்விக்கப்பட்டது