இழைபாக்டீரியா

இழைபாக்டீரியா
அலகிடு எதிர்மின்னி நுண்ணோக்கியால் எடுக்கப்பட்ட ஆக்டினோமைசிச் இசுரேலி
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
தொகுதி:
ஆக்டினோபாக்டீரியா

வகுப்பு:
ஆக்டினோபாக்டீரியா
Subclasses/Orders

இழைபாக்டீரியா (Actinobacteria) அதிக G+C விகிதம் கொண்ட கிராம் நேர்மறை பாக்டீரியாவாகும். இவை சமவெளியில்/நீரில் வாழக்கூடியன. இவற்றை வகைப்படுத்த இரும்பின் (Fe3+) எடுத்துக்கொள்ளும் வழிமுறையை சான்றாக கொண்டு வகைப்படுத்தினர். குலுட்டமைன் உற்பத்திகை என்னும் நொதியைக்கொண்டு அலசவும் பறிந்துரைக்கின்றனர். சைபீரியவில் கண்டுபிடிக்கப்பட்ட இழைபாக்டீரியா மாதிரி பூமியில் வாழும் மிகப்பழைய உயிரி எனக்கருதப்படுகிறது..

பண்புகள்

தொகு

இழைபாக்டீரியா நிலத்தில் காணப்படும் பொதுநுண்ணுயிரியாகும். அதில் மேலும் சில நன்னீர் மற்றும் கடல்சார் (உப்புநீர்) பகுதிகளிலும் வாழக்கூடியதாக உள்ளது. அது வன் கனிமப்பொருட்களை சிதைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக மரநார் (செல்லுலோசு) மற்றும் கைற்றினை சிதைப்பிலும், அதுவே கரிம சுழற்சி மற்றும் மாறுபாட்டில் மையப்பங்காக திகழ்கிறது. இது மண்ணின் வளத்திலும், வண்டல் உருவாக்கத்திலும் பெரும் பங்காற்றுகிறது. மைக்கோபாக்டீரியம், காரிணிபாக்டீரியம், ச்ட்ரெப்டோமைசிச் ஆகியன குறிப்பிடத்தக்க அங்கத்தினர்.

இழைபாக்டீரியா, இரண்டாம் தர அணுவெறிகையை உற்பத்தி செய்வதில் பெறிதும் அறியப்பட்டவை. இதை 1940ம் ஆண்டு செல்மன் வாக்ச்மான் மண்ணிலிருந்து கண்டறிந்தார். அதில் ஆக்டினோமைசின் என்னும் சேர்மத்தை கண்டற்ந்ததற்காக நோபல் பரிசும் பெற்றார். இவைகளில் ச்ட்ரெப்டோமைசிச் என்னும் பேரிணத்தில் அதிகப்படியான 2°ம் தர வளர்சிதை மாற்றப்பொருள் கண்டறியப்பட்டுள்ளது. இது முதலில் ஆக்டினோமைசீட்சு எனவும் பின்பு ஆக்டினோபாக்டீரியா (இழைபாக்டீரியா) எனவும் பெயர் மாற்றம் பெற்றது. காரணம் இவை புஞ்சைகளைப்போல் தண்டு (மைசீலியம்) தோற்றம் கொண்டதாக காணப்படுகிறது. இதில் பல பிராணவாயுவைக்கொண்டும் சில பிராணவாயுவை வெருத்தும் வாழ்கிறது. இவைகளில் ஃப்ர்மிகியூட்ச்களை தவிர்த்து கிராம் பாசிட்டிவ் வகையை சார்ந்தும், அவைகளுள் சில அரணமைக்கும் தன்மை கொண்டதாகவும் காணப்படுகிறது.

இது மட்டுமல்லாது நாம் மழைக்காலங்களில் மிகவும் ரசிக்கும் மண்வாசனை இவ்விழைபாக்டீரியாவால் உற்பத்தி செய்யப்படும் சியோச்மின் என்னும் சேர்மத்தால் தான் என்பதை அறிக. இவைகளில் சிலவற்றிற்கு, மனிதனின் நிறங்களுக்கு காரணமான மெலனின் என்னும் நிறமியை உற்பத்தி செய்யும் ஆற்றல் கூட காணப்படுகிறது.

பயன்கள்

தொகு

இவைகளில் ச்ட்ரெப்டொமைசிச் என்னும் பேரினத்தில் இருந்து அதிகப்படியான இரண்டாம் நிலை அணுவெறிகையைப் பெற்றுள்ளனர். இந்த இரண்டாம் தர அணுவெறிகையைப் பயன்படுத்தி நாம் பல நோய்களுக்கு மருந்தாகப்பயன்படுத்துகிறோம். இவ்வகை சேர்மத்தை உயிர்ப்பகை என அறியப்படுகிறது. இவை பூமியில் தனிம சுழற்சிக்கும் அவை மறுபயன்பாட்டில் வருவதற்கும் முக்கிய காரணியாகத் திகழ்கிறது. மண்ணின் வளம், அவைகளில் இருக்கின்ற உக்கல் (humus) உருவாவதில் பெரும் பங்கு வகிக்கிறது. இவைகளின் பயன்களை அறிய பல ஆய்வுகள் நடந்த வன்னமுள்ளன. பெரும்பாலானவை இன்னும் அறியப்படாமலே இருக்கிறது.

தீமைகள்

தொகு

இழைபாக்டீரியாவில் முதலில் அறியப்பட்டது நோயுண்டாக்குவன வாகவே. இழைபாக்டீரியா நோய்க் காரணியாக முக்கியப் பங்காற்றுகின்றன. காசநோயை உண்டாக்கும் மைக்கோபாக்டீரியம் டியூபர்குளோசிச், தொழு நோயை ஏற்படுத்தும் மை. லெப்பரே, நொகார்டியோசிச், மைசிட்டோமாச், ச்ட்ரெப்டோத்ரிக்கோசிச், ஆக்டினோமைக்காசிச் எனப் பல நோய்களைப் பரப்புகின்றன. மேலும் இவைகளில் சில தாவரத்திற்கும் நோய்களைப் பரப்புகின்றன.

மேற்கோள்கள்

தொகு
  • Ventura M, Canchaya C, Tauch A, et al. (September 2007). "Genomics of Actinobacteria: tracing the evolutionary history of an ancient phylum"
  • Prescott LM, Harley JP and DA Klein, 2005, Microbiology, McGrawHill publication, 6th edition, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0072920419 பிழையான ISBN
  • Starr MP, Stolp H, Truper HG, Balows A and HG Schlegel, The Prokaryotes, A handbook on habitats, isolation and identification of bacteria, Springer Verlag Publication, 2nd edition, Volume II
"https://ta.wikipedia.org/w/index.php?title=இழைபாக்டீரியா&oldid=4132461" இலிருந்து மீள்விக்கப்பட்டது