இழைபு (நூல்வனப்பு)
இழைபு என்பது நூலின் வனப்பு இயல்புகள் எட்டில் ஒன்று.
ஒற்றொடு புணர்ந்த வல்லெழுத்து இயைந்து வராமல் பாடி நூல் இயற்றுவது இழைபு என்னும் நூல்-வனப்பு ஆகும்.
அதாவது க்க, ச்ச, ட்ட, த்த, ப்ப, ற்ற – என வரும் சொற்கள் பாடலில் வராமல் நூல் செய்வது இந்த நூல்-வனப்பு.
இது இருசீர்-அடி, முச்சீர்-அடி, நாற்சீர்-அடி, ஐஞ்சீர்-அடி, அறுசீர்-அடி, எழுசீர்-அடி கொண்ட பாடல்களால் அமைந்திருக்கும். [1]
- பேராசிரியர் கருத்து
- இது இசைப்பாட்டு என்னும், இசைப்பாட்டாகிய செந்துறை மார்க்கத்தன என்றும், இழைபு அவிநயத்துக்கு உரியது என்றும், பேராசிரியர் குறிப்பிடுகிறார். ‘கலியும் பரிபாடலும் போலும்’ என எடுத்துக்காட்டும் தருகிறார்.
- இளம்பூரணர் கருத்து
- குறளடி முதல் ஐந்தடி என்பது 4-எழுத்து அடி முதல் 17-எழுத்து அடி வரையில் உள்ள 5 வகைப் பாடலடி
- இளம்பூரணர் மேற்கோள் பாடலின் பகுதி
- போந்து போந்து சார்ந்து சார்ந்து
- தேர்ந்து தேர்ந்து மூசி நேர்ந்து
- வண்டு சூழ விண்டு நீங்கி
- நீர்வாய்க் கொண்ட நீலம் ஊர்வாய்
- ஊதை வீச ஊர வாய
- மணியேர் நுண்தோள் ஒல்கி மாலை
- நன்மணம் கமழும் பன்னல் ஊர!
இழைபு-நூல் பாடல் இவ்வாறு இருக்கும்.
இவற்றையும் காண்க
தொகுஅடிக்குறிப்பு
தொகு- ↑
- ஒற்றொடு புணர்ந்த வல்லெழுத்து அடங்காது
- குறளடி முதலா ஐந்தடி ஒப்பித்து
- ஓங்கிய மொழியான் ஆங்கவண் மொழியின்
- இழைபின் இலக்கணம் இயைந்த தாகும். – தொல்காப்பியம், செய்யுளியல் 234