இணைய நெறிமுறைப் பதிப்பு 6 முகவரி

(இ.நெறி ப6 முகவரி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இணைய நெறிமுறைப் பதிப்பு 6 முகவரி (Internet Protocol Version 6 address, இ.நெறி ப6 முகவரி) என்பது இ.நெறி ப6 செயலாக்கப்பட்ட கணினி பிணையமொன்றில் ஒரு கணினியின் பிணைய இடைமுகம் அல்லது பிணையத்தில் பங்கேற்கும் ஓர் பிணைய கணுவினை அடையாளம் காணப் பயன்படுத்தப்படும் 128 பிட் அளவுள்ள எண் முத்திரை ஆகும்.[1][2][3]

இணைய நெறிமுறை முகவரிகள் வழங்கியுடன் இணைக்கப்பட்டுள்ள பிணைய இடைமுகங்களை ஐயமின்றி அடையாளம் காட்டுவதுடன் எங்குள்ளது என அறிந்து இ.நெ பொதிகளை சரியாக கொண்டு சேர்க்கின்றன. வழிகாண இ.நெறி ப.6 பொதியின் தலைப்பாகத்தில் உள்ள தரவிடங்களில் மூல மற்றும் சேருமிட இ.நெறி ப6 முகவரிகள் தரப்படும்.

இணையத்தின் முதல் அடையாளம் காணும் கட்டமைப்பான இ.நெறி ப4இன் வழித்தோன்றலாகும். 32 பிட் அளவில் குறியிடும் இ.நெறி.ப4ஐ விட 128 பிட்களில் குறியிடும் இதனால் மிகவும் பரந்தளவில் உள்ள பிணையங்களிலும் பயன்படுத்த இயலும்.

இ.நெறி.ப 6 முகவரி.

இ.நெறி ப6 முகவரி இ.நெறி ப4 முகவரியை நியமிக்கும் ஒரு இடைமுகத்தில் கூட நியமிக்கலாம் .இ.நெறி ப6 முகவரிகள் இ.நெறி ப6 தரவஞ்சலின் வேர் மற்றும் இலக்கை காண்பிக்கும் இ.நெறி ப6 தலையத்தின் ஒரு பகுதியாகும். மூல இ.நெறி ப6 முகவரிகள், இடைமுக வேரடைதலை தனித்துவமாக கண்டறியும் , எப்பொழுதும் ஒற்றைப் பரவல் முகவரிகள் ஆகும் . இலக்கு இ.நெறி ப6 முகவரிகள் என்பது ஒற்றைப் பரவல் , கண்ட பரவல் அல்லது பற்பரவல் முகவரிகள் ஆகும் .

முகவரி கட்டகம் தொகு

முகவரிகள் 128 பிட்கள் நீளம் மற்றும் தனி கட்டகமற்ற , மறுசுழற்சி மற்றும் குறிப்பற்ற முகவரிகள் அல்லாது , பல்வேறு கட்டக விவரிப்புகள் கொண்டதாகும்

மேலும் காண்க தொகு

கணினி_பிணையமாக்கம்_தலைப்புகள்_பட்டியல்

மேற்கோள்கள் தொகு