ஈகோபார்க் (வியட்நாம்)
ஈகோபார்க் (Ecopark) என்பது வியட்நாமின் ஹங் யென் மாகாணத்தில் ஹனோயின் புறநகரில் உள்ள ஒரு நகர்ப்புற நகர வளர்ச்சி திட்டம் ஆகும். தற்போது வளர்ச்சியில் உள்ள சுற்றுச்சூழலியல் பூங்கா 500 ஏக்கர் பரப்பளவில் 8.2 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டு மூலதனமாக இருக்கும்.[1] ஒன்பது கட்டுமான கட்டங்களாகப் பிரிக்கப்பட்ட முழு வளர்ச்சியும் 18 ஆண்டு காலத்தில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.[2]
அமைவிடம்
தொகுஇத்திட்டப் பணியிடம் பெட் ட்ராங் கிராமத்திற்கு அருகில் அமைந்துள்ளது, தான் திரி பாலத்திலிருந்து 4 கி.மீ மற்றும் ஹொன் கியோம் ஏரியிலிருந்து 13 கி.மீ.தொலைவில் - ஹனோயின் மையம் என்ற இடத்தில் உள்ளது. “ஹனோய் கேபிடல் கன்ஸ்ட்ரக்ஷன் மாஸ்டர் பிளான் 2030 மற்றும் தொலைநோக்கு 2050” க்கு இணங்க, ஏராளமான பாலங்கள் மற்றும் போக்குவரத்து சுரங்கங்கள் சிவப்பு நதியைக் கடக்கும், இது திட்ட இடம் மற்றும் ஹனோய் மையத்திற்கு இடையிலான பயண நேரங்களை கணிசமாகக் குறைக்கும்.
வளர்ச்சி
தொகுபின்வரும் வியட்நாமிய நிறுவனங்களின் கூட்டு நிறுவனமான வியட் ஹங் நகர மேம்பாட்டு மற்றும் முதலீட்டு ஜே.எஸ்.சி (விஹாஜிகோ) என்பவரால் ஈகோபார்க் திட்டம் உருவாக்கப்பட்டது:[3]
- ஏஏ கட்டுமான கட்டமைப்பு கூட்டு பங்கு நிறுவனம் (ஏஏ கார்ப்பரேஷன்)
- ஏடிஏ ஆர்கிடெக்ட்ஸ் கோ, லிமிடெட்
- நாம் தான் டோ கட்டுமான ஆலோசகர்கள் ஜே.எஸ்.சி.
- தான் நாம் கட்டுமானம் மற்றும் முதலீடு ஜே.எஸ்.சி.
- டூய் நியா கோ, லிமிடெட்
- ஃபுங் தியன் டிரேடிங் கோ, லிமிடெட்
- நாம் தான் சுற்றுலா மற்றும் வணிகம் ஜே.எஸ்.சி.
- பாவோ டின் டிரேடிங் கோ, லிமிடெட்.
உள்ளூர் விவசாயிகளிடமிருந்து எதிர்ப்பு
தொகுவியட்நாமில் அனைத்து நிலங்களும் அரசுக்கு சொந்தமானவை என்பதால், இந்த திட்டம் சுமார் 2000 விவசாயிகளிடமிருந்து நிலத்தை மீளப் பெற்றது.[4]
2006 இல் எதிர்ப்புக்கள் இருந்தன.[5] ஏப்ரல் 24, 2012 அன்று, இது வியட்நாமில் நடந்த மிகப்பெரிய நில மோதல்களில் ஒன்றாக மாறியது, 1000 காவல்துறையினர் கம்புகள் பாறைகள் மற்றும் பெட்ரோல் வெடிகுண்டுகள் போன்றவற்றைக் கொண்ட விவசாயிகளை எதிர்கொண்டனர்.[4] காவல்துறையினர் கூட்டத்திற்குள் கண்ணீர்ப்புகை வீசினர், பல எதிர்ப்பாளர்களைக் கைது செய்தனர்,[5] மேலும் சில கிராமவாசிகள் காவல்துறையினரின் குழுக்களால் தாக்கப்பட்டனர்.[6]
ஒரு விவசாயி "ஆரம்பத்தில் ஒரு சதுர மீட்டருக்கு $2.63 க்கு சமமான விலை வழங்கப்பட்டது. நிலத்தின் மதிப்பு தற்போது மூன்று மடங்கு $ 7.18 ஆக உயர்ந்துள்ளது", அதே நேரத்தில் "திட்டமிடப்பட்ட இடத்தில் கட்டப்படவுள்ள குடியிருப்புகள் கடந்த ஆண்டு மே மாதத்தில் சதுர மீட்டருக்கு குறைந்தபட்சம் 886 டாலர்களாக வழங்கப்பட்டன. " [7]
குடியிருப்புகள்
தொகுமுழுமையாக முடிந்ததும், ஈகோபார்க் சுமார் 20,000 குடியிருப்பு அலகுகளைக் கொண்டிருக்கும்: வில்லாக்கள், பாதியாக பிரிக்கப்பட்ட வீடுகள் மற்றும் அடுக்குமாடி அலகுகள் மொத்த தள பரப்பளவில் சுமார் 35% ஆக்கிரமித்துள்ளன.[8] சமூகங்கள் 24/7 பாதுகாப்போடு அமைந்துள்ளன.[9]
1. ரங் கோ அடுக்கக்குடியிருப்புகள்[10]
ஈகோபார்க்கின் முதல் கட்டத்தில் கட்டப்பட்ட, ரங் கோ அடுக்குமாடி குடியிருப்புகள் ஈகோபார்க்கின் கட்டுமானத் தொலைநோக்கின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளன, இது மனிதர்களுக்கும் இயற்கைக்கும் இடையில் நல்லிணக்கத்தை உருவாக்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ளன. அடுக்குமாடி குடியிருப்புகள் சுற்றியுள்ள நிலப்பரப்பு, வில்லாக்கள் மற்றும் பாதி பிரிக்கப்பட்ட வில்லாக்கள் ஆகியவற்றைக் கொண்டு கட்டப்பட்டுள்ளன. ரங் கோ ஐந்து தொகுதிகளை உள்ளடக்கியது, 71 சமீ முதல் 151 சமீ வரை பரந்த அளவிலான அடுக்குமாடி குடியிருப்புகளையும், 141 சமீ முதல் 144.9 சமீ வரையிலான கட்டிடத்தின் உச்சித்தளத்தில் உள்ள ஆடம்பர வீடுகளையும் வழங்குகிறது.
2. ஃபோ ட்ரக் கடைகளுடனான வீடுகள்[11]
ஈகோபார்க்கில் வசிப்பவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு வர்த்தகம், கடைவலம், சுற்றுலா மற்றும் சாப்பாட்டு இடமாக உருவாக்கப்பட்டது, ஃபோ ட்ரூக்கில் 130 பாதியாக பிரிக்கப்பட்ட ‘கடை வீடுகள்’ உள்ளன. ஒவ்வொரு வீட்டிலும் 100-120 சமீ பரப்பளவு உள்ளது, இரண்டு தெருக்களில் 5 மீ அகலமுள்ள இரண்டு தெரு முன்பக்கங்கள் உள்ளன. ஃபோ ட்ரூக்கில் உள்ள ‘கடை வீடுகள்’ நவநாகரீக ஆடை, அலங்கா அங்காடிகள், குழம்பியகங்கள் மற்றும் துரித உணவுக் கடைகள் உள்ளிட்ட வணிகங்களை நோக்கமாகக் கொண்டிருப்பது மட்டுமல்லாமல், பலவிதமான செயல்பாடுகளுக்காக தனிப்பயனாக்க வடிவமைக்கப்பட்டுள்ளன.
3. வூன் துங் கதவுடன் பாதுகாக்கப்பட்ட சமூகம் (வில்லாக்கள் மற்றும் பாதியளவு பிரிக்கப்பட்ட வில்லாக்கள்)[12]
11.07 ஏக்கர் பரப்பளவு கொண்ட வூன் துங் வில்லாக்களில் 38 பிரிக்கப்பட்ட வில்லாக்கள் (293 - 766 சமீ /வில்லா) அடங்கும். அனைத்து வில்லாக்களும் ‘பசுமை’ கட்டுமான முறைகளைப் பயன்படுத்தி கட்டப்பட உள்ளன, அவற்றின் வடிவமைப்புகள் திறந்தவெளியை முன்னிலைப்படுத்தும்.
4. வூன் மாய் கதவுடன் பாதுகாக்கப்பட்ட சமூகம் (வில்லாக்கள் மற்றும் பாதியளவு பிரிக்கப்பட்ட வில்லாக்கள்) [13]
7.68 ஏக்கர் பரப்பளவு கொண்ட வூன் மாய் வில்லாக்கள் 109 பிரிக்கப்பட்ட வில்லாக்களை (296 - 618 சமீ / வில்லா) உள்ளடக்கியது.
வசதிகள்
தொகுஈகோபார்க் திட்ட வளாகத்தின் வசதிகளுள் பின்வருவன அடங்கும்.
- வணிக மற்றும் அலுவலக மையங்கள்
- சர்வதேச மருத்துவமனை
- சர்வதேச பல்கலைக்கழகம்(பிரித்தானிய பல்கலைக்கழகம் வியட்நாம் (BUV). 70 மில்லியன் டாலர் என மதிப்பிடப்பட்ட செலவு இறுதியில் 10,000 மாணவர்களுக்கு இடமளிக்கும்)[14]
- கருப்பொருள் பழைய நகரம்
- சினிமாக்கள்
- கிளப் ஹவுஸ் பகுதி
- நீச்சல் குளங்கள்
- டென்னிஸ் கோர்ட்டுகள்
- உடற்பயிற்சி அரங்கங்கள்
- பூங்காக்கள்
- குழந்தைகள் விளையாட்டு மைதானங்கள்
- 18-துளை கோல்ஃப் மைதானம்
- பிலின் ஆங்கிலம்
குறிப்புகள்
தொகு- ↑ "Archived copy". Archived from the original on 2011-08-17. பார்க்கப்பட்ட நாள் 2011-05-27.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ http://www.ecopark.com.vn/index.php?option=com_content&view=category&layout=blog&id=27&Itemid=65&lang=en
- ↑ http://www.ecopark.com.vn/index.php?option=com_content&view=article&id=31&Itemid=62&lang=en
- ↑ 4.0 4.1 http://www.eurasiareview.com/25042012-vietnam-mass-security-clampdown-in-land-seizure/
- ↑ 5.0 5.1 https://www.theguardian.com/cities/2016/jan/21/inside-hanoi-gated-communities-elite-enclaves-air-cleaner
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-07-27. பார்க்கப்பட்ட நாள் 2020-11-25.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ https://www.bloomberg.com/news/articles/2012-07-10/shootout-makes-land-disputes-vietnam-s-priority-southeast-asia
- ↑ http://www.ecopark.com.vn/index.php?option=com_content&view=article&id=34&Itemid=68&lang=en
- ↑ http://www.ecopark.com.vn/index.php?option=com_content&view=article&id=224&catid=35%3Afocus-news&Itemid=66&lang=en
- ↑ "Archived copy". Archived from the original on 2011-06-30. பார்க்கப்பட்ட நாள் 2011-06-02.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ "Archived copy". Archived from the original on 2011-08-24. பார்க்கப்பட்ட நாள் 2011-06-02.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ http://ecopark.com.vn/index.php?option=com_content&view=article&id=6&Itemid=58&lang=en
- ↑ http://ecopark.com.vn/index.php?option=com_content&view=article&id=52&Itemid=59&lang=en
- ↑ http://www.ecopark.com.vn/index.php?option=com_content&view=article&id=161&catid=1%3Ageneral-news&Itemid=66&lang=en