ஈகொர் திமீத்ரியெவிச் நோவிக்கொவ்

(ஈகோர் திமித்ரியேவிச் நோவிகோவ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஈகொர் திமீத்ரியெவிச் நோவிக்கொவ் (Igor Dmitriyevich Novikov, உருசியம்: И́горь Дми́триевич Но́виков, பிறப்பு: நவம்பர் 10, 1935 மாஸ்கோ) ஓர் உருசிய சோவியத் கோட்பாட்டு வானியற்பியலாளரும் அண்டவியலாளரும் ஆவார்.[1]

ஈகோர் திமித்ரியேவிச் நோவிகோவ்
И́горь Дми́триевич Но́виков
பிறப்புநவம்பர் 10, 1935 (1935-11-10) (அகவை 88)
மாஸ்கோ, உருசியா
தேசியம்உருசியர்
பணிகோட்பாட்டு வானியற்பியலாளர், அண்டவியலாளர்

இவர் 1980 களின் இடைப்பகுதியில் தன் நிறைவு நெறிமுறையை உருவாக்கினார். இது காலப்பயணக் கோட்பாட்டுக்கான சிறந்த பங்களிப்பு ஆகும்.

இவர் 1965 இல் வானியற்பியலில் முனைவர் பட்டம் பெற்றார். இவர் வானியற்பியலில் 1970 இல் முதுமுனைவர் பட்டம் பெற்றார். இவர் 1974 முதல் 1990 வரை மாஸ்கோவில் இருந்த உருசிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பியல் வானியற்பியல் துறையின் தலவராக விளங்கினார். இவர் 1991 க்கு முன்பே இலெபெதேவ் இயற்பியல் நிறுவனத்தின் வானியற்பியல் துறைத்தலைவராகவும் மாஸ்கோ அரசு பல்கலைக்கழகப் பேராசிரியராகவும் இருந்துள்ளார்.இவர் 1994 இல் இருந்து டென்மார்க்கில் உள்ள கோப்பனேகன் பல்கலைக்கழக கோட்பாடு வானியற்பியல் துறையின் இயக்குநராக இருந்தார். அண்மையில் இவர் அப்பல்கலைக்கழக வான்காணக வானியற்பியல் மையப் பேராசிரியராகவும் உள்ளார். இவர் 1998 இல் இருந்து அரசு வானியல் கழகத்தின் உறுப்பினர் ஆனார்.

வெளியீடுகள்

தொகு

இவர் பல மக்கள் அறிவியல் நூல்களை எழுதியுள்ளார்:

  • கருந்துளைகளும் புடவியும், (மொழிபெயர்ப்பு: விதாலி ஐ. கிசின், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக அச்சகம் 1995)
  • காலமெனும் ஆறு, (மொழிபெயர்ப்பு: விதாலி ஐ. கிசின், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக அச்சகம் Press 1998, 2001)
  • Il ritmo del tempo, Di Renzo Editore, Roma, 2006

இவர் அலெக்சாந்தர் எசு. சாரோவுடன் இணைந்து 15 அண்டவியல், வானியற்பியல் நூல்களையும் எட்வின் ஹபிள் வாழ்க்கை வரலாற்று நூலையும் எழுதியுள்ளார் (கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக அச்சகம் 1992).

மேற்கோள்கள்

தொகு
  1. "Space Observatory "Millimetron" ACC FIAN".