ஈச்சன்விளை
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ஈச்சன்விளை (Eachenvilai), இந்தியாவின் தென்கோடியான கன்னியாகுமரியில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஒரு சிற்றூறாகும். இது தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த சிற்றூறின் ஒரு பகுதி(கிழக்கு) அகஸ்தீஸ்வரம் பேரூராட்சியிலும் மற்றொரு பகுதி(மேற்கு) தென் தாமரைகுளம் பேரூராட்சியிலும் அமைந்துள்ளது.
இந்த ஊர் கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதியிலும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியிலும் உள்ளது. 2008 தொகுதி மறுசீரமைப்பு வரை திருச்செந்தூர் மக்களவைத் தொகுதியின் கீழ் இருந்த இந்த ஊர் அதன் பின்னர் புதிதாக உருவாக்கப்பட்ட கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியுடன் இணைக்கப்பட்டது.
இந்த சிற்றூறில் எண்பதிற்கும்(80) அதிகமான குடும்பத்தினர்கள் வசித்து வருகின்றனர்.
அடிப்படை வசதிகள்
இந்த சிற்றூறில் கீழ்க்கண்ட அடிப்படை வசதிகள் உள்ளன.
அடிப்படை வசதி | எண்ணிக்கை |
---|---|
அரசு பள்ளி | 1 |
சிறு நூலகம் | 1 |
மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டி | 1 |
சிறு விளையாட்டு மைதானம் | 1 |
கலையரங்கம் | 1 |
பேருந்து நிறுத்தம் | 4 |
பேருந்து நிழற்கூடம் | 2 |
குளம் | 1 |
சிற்றாறு | 2 |
பொது குடிநீர் குழாய்கள் |
பொது வழிபாட்டு தலங்கள்
- ஸ்ரீமன் நாராயணசுவாமி திருக்கோவில்
- வீரமாகாளி அம்மன் திருக்கோவில்