ஈனோ ஆற்றுத் திருவிழா
ஈனோ நதி திருவிழா (Eno River Festival) அமெரிக்க மாநிலமான வடக்கு கரோலினாவில் உள்ள தர்காம் நகரில் நடைபெறும் ஒரு திருவிழாவாகும். இதை ஈனோ ஆற்றுத் திருவிழா என்றும் அழைக்கிறார்கள். 1980 ஆம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் சூலை மாதம் நான்காம் தேதி வாக்கில் இசை மற்றும் பண்பாட்டு விழாவாக இது நடைபெறுகிறது. ஈனோ நதியின் சுற்றுச்சூழல் அமைப்பு, வரலாறு மற்றும் பண்பாட்டைப் பாதுகாப்பதற்காக, இலாப நோக்கமற்ற ஈனோ நதி சங்கம் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்கிறது. தர்காமில் அமைந்துள்ள ஈனோ பூங்காவில் உள்ள வெசுட்டு பாயிண்டு என்ற இடத்தில் திருவிழா நடைபெறுகிறது.
ஈனோ ஆற்றுத் திருவிழா | |
---|---|
காலப்பகுதி | ஆண்டுக்கு ஒருமுறை |
அமைவிடம்(கள்) | ஈனோவின் வெசுட்டுப் பாயிண்ட்டு, தர்காம், வடக்கு கரோலினா |
Established | 1980 |
நிறுவனர் | மார்கரெட் நிகார்ட்டு |
அமைப்பாளர் | ஈனோ நதி சங்கம் |
வலைத்தளம் | |
https://www.enoriver.org/features/festival-for-the-eno/ |
வரலாறு
தொகுஈனோ நதி மற்றும் அதன் சுற்றுப்புறங்களைப் பாதுகாப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு அமைப்பாக 1966 ஆம் ஆண்டு ஈனோ நதி சங்கம் நிறுவப்பட்டது. அந்த நேரத்தில், நதியானது அச்சுறுத்தலுக்கு உட்பட்டதாகவும் பலவீனமான" நதி என்றும் பட்டியலிடப்பட்டிருந்தது. நதி பள்ளத்தாக்கை வெள்ளத்தால் மூழ்கடிக்கும் ஒரு நீர்த்தேக்கத்தை உருவாக்க வேண்டுமென தர்காம் நகரம் முன்மொழிந்தது. ஈனோ நதி சங்கம் இந்த நீர்த்தேக்கத் திட்டத்தை எதிர்க்க உருவாக்கப்பட்டது, மேலும் இச்சங்கம் ஈனோ நதி மாநிலப் பூங்காவை உருவாக்க முன்மொழிந்தது, இப்பூங்கா 1972 ஆம் ஆண்டில் அங்கீகரிக்கப்பட்டு 1975 ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது [1]
முதல் ஈனோ திருவிழா 1980 ஆம் ஆண்டு சூலை மாதம் 4 அன்று நடைபெற்ற ஓர் ஒரு நாள் நிகழ்வாகும் [2] இதற்கு முன் 1976 ஆம் ஆண்டு [3] இதே இடத்தில் என்.சி நாட்டுப்புற வாழ்க்கை விழா நடைபெற்றது..
2020 ஆம் ஆண்டில், கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக திருவிழா ரத்து செய்யப்பட்டது, அதன் இடத்தில் ஒரு மெய்நிகர் நிகழ்வு நடைபெற்றது. [4] திருவிழா 2021 ஆம் ஆண்டில் மீண்டும் நடைபெற்றது. [5]
மேற்கோள்கள்
தொகு- ↑ https://www.wunc.org/people/paul-kiefer (2019-07-03). "The Festival for the Eno Enters Its 40th Year". WUNC (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-06-07.
{{cite web}}
: External link in
(help)|last=
- ↑ "Festival for the Eno | NCpedia". www.ncpedia.org. பார்க்கப்பட்ட நாள் 2023-06-06.
- ↑ "History". Enofest (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-06-07.
- ↑ WRAL (2020-06-26). "Festival for the Eno goes virtual this year". WRAL.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-06-06.
- ↑ WRAL (2021-05-25). "EnoFest to return July 4th weekend". WRAL.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-06-06.