ஈபிட்டா (EBITDA) என்பது வட்டி, வரிகள், தேய்மானம், கடன் தவணை செலுத்துதல் ஆகிய செலவீனங்கள் கழிக்கப்படும் முன் உள்ள வருவாய் (earnings before interest, taxes, depreciation, and amortization) என்ற ஆங்கிலத் தொடரில் உள்ள சொற்களின் முதல் எழுத்துகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு குறுக்கம். வணிக நிறுவனங்களின் வருவாயைக் கணக்கிட உதவும் வழிமுறைகளில் இதுவும் ஒன்று. இது ஒரு முறை சாரா அளவீடு (non-GAAP metric). ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் ஒரு வணிக நிறுவனத்தின் நிகர வருமானத்தில் அக்காலகட்டத்தில் செலுத்தப்பட்ட வரிகள், தேய்மானக் கழிவு, வட்டி, கடன் தவணை ஆகியவற்றை மீண்டும் சேர்த்தால் ஈபிட்டாவைக் கணக்கிடலாம்.[1][2][3]

பலவகையான மூலதன முறைமைகளின் தாக்கத்தால் ஒரு நிறுவனத்தின் நிகர வருமானம் வேறுபடலாம். இதனால் இருவேறு மூலதன முறைகளைக் கொண்ட நிறுவனங்களின் நிகர வருமானத்தை ஒப்பிட்டு நோக்க முடியாது. மூலதன முறையின் தாக்கங்களை நீக்கிவிட்டு அந்நிறுவனத்தின் பொருள் ஈட்டும் திறனை ஒப்பிட ஈபிட்டா உதவுகிறது. கடன் தவணை, வட்டி, வரிகள், தேய்மானம் போன்றவை மூலதன முறையால் பாதிப்படையக் கூடியவை. எனவே இவற்றின் பற்றை நீக்கிவிட்டால் கிடைக்கும் ஈபிட்டா மூலதன முறைச் சார்பின்றி நிறுவனங்களின் வருமானம் ஈட்டும் திறனை உணர்த்துகிறது.

குறிப்புதவிகள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "EBITDA - Financial Glossary". Reuters. October 15, 2009. Archived from the original on June 30, 2012. பார்க்கப்பட்ட நாள் February 9, 2012.
  2. Professional English in Use Finance, Cambridge University Press
  3. "Pronunciation of ebitda - how to pronounce ebitda correctly". Howjsay.com. October 29, 2006. பார்க்கப்பட்ட நாள் January 21, 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈபிட்டா&oldid=3769068" இலிருந்து மீள்விக்கப்பட்டது