ஈமு போர்
ஈமு போர் அல்லது பெரிய ஈமு போர் என்றும் அழைக்கப்படுகிறது.[1]1932ல் மேற்கு ஆஸ்திரேலியாவில் பெரிய அளவில் பண்ணை நிலங்களில் அழிவை ஏற்படுத்திய ஈமு கோழிகளை ஒழிக்க அனைத்து முறைகளும் தோல்வியடைந்ததால், ஆயுதம் ஏந்திய இராணுவ வீரர்களை ஈடுபடுத்த அரசாங்கம் முடிவு செய்தது. அப்போது பத்திரிகைகள் வைத்த பெயர் ஈமு போர் என்பதாகும்.. 2 நவம்பர் முதல் 10 டிசம்பர் 1932 வரை இரண்டு பகுதிகளாக நடந்த ஈழு கோழிகள் ஒழிப்புப் போராட்டத்தில் 986 ஈமு கோழிகள் மட்டுமே கொல்லப்பட்டது. இறுதி வெற்றி ஈமு பறவைகளுக்கே கிடைத்தது.
ஈமு போர் | |
---|---|
சுட்டுக் கொன்ற ஈமு கோழியை கையில் பிடித்திருக்கும் ஆத்திரேலிய வீரர் | |
இடம் | கேம்பியன் மாவட்டம், மேற்கு ஆஸ்திரேலியா |
திட்டமிட்டவர் | சர் ஜார்ஜ் பியர்ஸ் |
நோக்கம் | ஈமு கோழி இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தல் |
தேதி | 2 நவம்பர் – 10 டிசம்பர் 1932 (1 மாதம், 1 வாரம் and 1 நாள்) |
செய்து முடித்தவர் | Australian Army, ஆஸ்திரேலியப் பீரங்கிப் படையின் மேஜர் ஜி.பி.டபிள்யூ. மெரிடித் |
விளைவு | 986 ஈமு கோழிகள் கொல்லப்படல் (ஒட்டுமொத்த ஈமு தொகையில் குறைந்தபட்ச தாக்கமே ஏற்படுத்தியது) |
பின்னணி
தொகுஆஸ்திரேலிய அரசாங்கம் முதலாம் உலகப் போரிலிருந்து திரும்பிய வீரர்களுக்கு மீள்குடியேற்றத்திற்காக மேற்கு ஆஸ்திரேலியாவில் நிலம் வழங்கியதுடன் கோதுமை விவசாயத்தை ஊக்குவித்தது. ஆனால் அப்படி விவசாயம் செய்யத் தொடங்கியவர்களுக்கு உலகப் பெரும் மந்தநிலை பெரும் அடியாக வந்தது. அரசாங்கம் பயிர் உற்பத்தியை அதிகரிக்க அழைப்பு விடுத்தது மற்றும் மானியங்களை வழங்கியது. ஆனால் பயிர்களின் விலை தொடர்ந்து சரிந்தது.
இந்த நெருக்கடியான நேரத்தில் கோதுமை வேளாண்மையை சீரழிக்க 20,000 ஈமு பறவைகள் படையெடுத்தது.[2][3] புதிதாக உருவாக்கப்பட்ட வயல்வெளிகள், கால்நடைகள் மற்றும் குதிரைகளுக்கு ஒதுக்கப்பட்ட தீவனங்கள் அனைத்தும் ஈமுக்களின் உணவாக மாறியது. விளைநிலங்களில் கூட்டமாக அத்துமீறி நுழைந்து பயிர்களை தின்று நாசம் செய்தது.[3] முதலாம் உலகப் போரில் பணியாற்றிய முன்னாள் இராணுவ வீரர்கள் அடங்கிய விவசாயிகள் பிரதிநிதிகள் குழு, ஆஸ்திரேலியாவின் பாதுகாப்புத் துறை அமைச்சர் சர் ஜார்ஜ் பியர்ஸை சந்தித்த விவசாயிகள், ஈமு கோழி ஒழிப்புக்கு இயந்திரத் துப்பாக்கிகளை பயன்படுத்த கோரிக்கை விடுத்தனர். மத்திய அரசு இயந்திரத் துப்பாக்கிகளையும், ராணுவத்தினரையும் பயன்படுத்தி, ஈமுக் கோழிகளால் பாதிக்கப்பட்ட மேற்கு ஆஸ்திரேலியா மாநில அரசே அதற்கான செலவை ஏற்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் அனுமதித்தது. [3][4]
ஈமு போர்
தொகுமேஜர் ஜி.பி.டபிள்யூ. மெரிடித் ஈமு கோழிகளின் ஒழிப்புப் பணிக்குழுவின் பொறுப்பில் இருந்தார். ஈமு அழிப்புப் படையில் 10,000 தோட்டாக்கள், இரண்டு லூயிஸ் இயந்திர துப்பாக்கிகள் மற்றும் இரண்டு வீரர்கள் இருந்தனர்.[5] 1932 அக்டோபரில் தொடங்க வேண்டிய பணி மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டு நவம்பர் 2 ஆம் நாள் தொடங்கியது. ஈமு வேட்டைக்காரர்கள், ஆஸ்திரேலிய குதிரைப்படைக்கு தொப்பிகளை உருவாக்க 100 ஈமு கோழிகளின் தோல்களை ஒழுங்கமைக்க வேண்டும் என்ற விதிக்கு கட்டுப்பட்டதாக கூறப்படுகிறது.
போர்
தொகுமேற்கு ஆஸ்திரேலியாவின் கேம்பியன் மாவட்டம் ஈமு கோழிகளின் தொந்தரவின் மையமாக இருந்தது. 50 பறவைகள் கொண்ட குழுவை வேட்டைக் குழுவினர் கண்டனர். ஆனால் ஈமுக்கள் சிறு குழுக்களாக உடைந்து வெவ்வேறு திசைகளில் ஓடின. முதல் நாள் முடிவில், "ஒரு டசனுக்கும் அதிகமான ஈழு கோழிகளை மட்டுமே" கொல்லப்பட்டதாக ஒரு அறிக்கை கூறியது.
இரண்டு நாட்களுக்குப் பிறகு, ஒரு அணைக்கு அருகில் சுமார் ஆயிரம் ஈமுக்கள் காணப்பட்டது. ராணுவ வேட்டையாளர்கள் ஈமு கோழிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில். 12 ஈழு பறவைகள் இறந்தது. மீதிப் பறவைகள் அனைத்தும் சிதறின.
மோட்டார் வண்டியில் இயந்திரத் துப்பாக்கியை இணைத்து, ஈழு கோழிகளை பின்தொடர்ந்து செல்வதற்கான முயற்சிகளும் தோல்வியடைந்தது.. சமதள மோட்டார் வண்டி சவாரியின் போது ஒரு குண்டைக் கூட சுட ஈமு கோழி மீது சுட முடியவில்லை. பறவைகளின் வேகத்தில், கரடுமுரடான சாலையில் மோட்டார் வாகனங்கள் செல்ல முடியவில்லை.
எட்டு நாட்கள் பணியில் சுமார் 2,500 ஈழு வேட்டைக்காரர்கள் பேர் பணிநீக்கம் செய்யப்பட்டனர். 50 ஈமுக்கள் மட்டுமே இறந்ததாக பல அறிக்கைகள் கூறுகின்றன. 200-500 பறவைகள் கொல்லப்பட்டதாக வேறு சில தகவல்கள் கூறுகின்றன. படைக்கு எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று மெரிடித் தெரிவித்தார்..
அப்போதைய பறவை கண்காணிப்பாளரான டொமினிக் செர்வென்டி இந்த பயணத்தில் ஈமு வேட்டைக்காரர்களுடன் பயணம் செய்தார். அவரின் கூற்றுப்படி, “ஈமு மந்தைக்குள் விரைந்து சென்று அவற்றை எளிதாகக் கொன்றுவிடலாம் என்று இயந்திர துப்பாக்கி ஏந்தியவர்களின் கணக்கு அனைத்து வீண் ஆனது“.. ஈமு கோழிகளை அடக்க கொரில்லா உத்திகளைப் பயன்படுத்த இராணுவம் முடிவு செய்தது. ஆனால் ஒரு மாதத்திற்குப் பிறகு போர்முனையில் இருந்து பின்வாங்கியது.
ஈமு கோழி கொல்லும் பணி நவம்பர் 2, 1932 இல் தொடங்கியது.நவம்பர் 8ஆம் தேதி ஆஸ்திரேலிய நாடாளுமன்றம் நிலைமையை ஆய்வு செய்தது. ஊடகங்கள் மற்றும் பொதுமக்களின் கடுமையான விமர்சனத்தின் காரணமாக 10 டிசம்பர் 1932 அன்று ஈமு கோழி போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது..[6]
மேற்கோள்கள்
தொகு- ↑ Shuttlesworth, Dorothy Edwards (1967). The Wildlife of Australia and New Zealand. University of Michigan Press. p. 69.
- ↑ Gill, Frank B. (2007). Ornithology (3rd ed.). Macmillan. p. xxvi. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7167-4983-7.
- ↑ 3.0 3.1 3.2 Johnson, Murray (2006). "'Feathered foes': soldier settlers and Western Australia's 'Emu War' of 1932". Journal of Australian Studies 30 (88): 147–157. doi:10.1080/14443050609388083. பன்னாட்டுத் தர தொடர் எண்:1444-3058.வார்ப்புரு:Page number needed
- ↑ "Rain Scatters Emus". The Argus (Perth): p. 7. 18 October 1932. http://nla.gov.au/nla.news-article4504009.
- ↑ Arthur, Jay Mary (2003). The Default Country: A Lexical Cartography of Twentieth-century Australia. UNSW Press. pp. 123–124. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-86840-542-1.
- ↑ Jenkins, C.F.H. (1988). The Wanderings of an Entomologist. Cornell University Press. p. 8. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7316-2888-9.
வெளி இணைப்புகள்
தொகு- Plants & Animals: Emu
- "Attack on Emus". The Argus. 12 November 1932. http://nla.gov.au/nla.news-article4508317.