ஈய இசுக்காண்டியம் தாண்டலேட்டு

பீங்கான் பொருள்

ஈய இசுக்காண்டியம் தாண்டலேட்டு (Lead scandium tantalate) Pb(Sc0.5Ta0.5)O3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் குறிக்கப்படும் வேதிச் சேர்மமாகும் இச்சேர்மம் ஈயம், இசுக்காண்டியம் மற்றும் தாண்டலம் ஆகியவற்றின் கலப்பு ஆக்சைடு ஆகும். பெரோவ்சுகைட்டு கட்டமைப்பைக் கொண்ட ஒரு பீங்கான் பொருளாகக இது வகைப்படுத்தப்படுகிறது.[1] கட்டமைப்பிலுள்ள பி தளத்தில் இடம்பெற்றுள்ள Sc மற்றும் Ta அணுக்கள் ஒழுங்குபடுத்தப்பட்ட மற்றும் ஒழுங்கற்ற உள்ளமைவுகளுக்கு இடையில் ஓர் இடைநிலையான அமைப்பைக் கொண்டுள்ளன. வெப்பப்படுத்துவதன் மூலம் இதை நன்றாகச் சரிசெய்யலாம். 270 கெல்வின் (−3 °செ; 26 °பா) அளவுக்கும் குறைவான வெப்பநிலையில் இது பெரோமின் பண்பையும்[2] பீசோமின் பண்பையும்[3] கொண்டிருக்கும். கட்டமைப்பு ரீதியாக ஒத்த ஈய சிர்கோனேட்டு தைட்டனேட்டு மற்றும் பேரியம் இசுட்ரோன்சியம் தட்டனேட்டு போன்றவை வெப்பவியல் புகைப்படக் கருவிகளில் குளிரூட்டப்படாத குவியத்தள வரிசை அகச்சிவப்பு படமாக்கல் உணரிகள் தயாரிக்க இது பயன்படுத்தப்படுகிறது.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. Chu, Fan; Fox, Glen R.; Setter, Nava (21 January 2005). "Dielectric Properties of Complex Perovskite Lead Scandium Tantalate under dc Bias". Journal of the American Ceramic Society 81 (6): 1577–1582. doi:10.1111/j.1151-2916.1998.tb02519.x. 
  2. Groves, P (10 December 1985). "Low-temperature studies of ferroelectric lead scandium tantalate". Journal of Physics C: Solid State Physics 18 (34): L1073–L1078. doi:10.1088/0022-3719/18/34/002. 
  3. De Kroon, A. P.; Dunn, S. C.; Whatmore, R. W. (February 2001). "Piezo- and pyroelectric properties of lead scandium tantalate thin films". Integrated Ferroelectrics 35 (1–4): 209–218. doi:10.1080/10584580108016902. 
  4. Todd, Michael A.; Donohue, Paul P.; Watton, Rex; Williams, Dennis J.; Anthony, Carl J.; Blamire, Mark G. (1 December 2002). "High-performance ferroelectric and magnetoresistive materials for next-generation thermal detector arrays". In Longshore, Randolph E; Sivananthan, Sivalingam (eds.). Materials for Infrared Detectors II. Vol. 4795. p. 88. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1117/12.452244. S2CID 110191731.