ஈரயோடோசில் சல்பேட்டு
ஈரயோடோசில் சல்பேட்டு (Diiodosyl sulfate) என்பது (IO)2SO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். அயோடினும் கந்தக அமிலமும் சேர்ந்து இந்த கார உப்பு உருவாகிறது. மஞ்சள் நிறத்தில் படிகங்களாக ஈரயோடோசில் சல்பேட்டு உருவாகிறது. [1]
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
அயோடோசில் சல்பேட்டு
| |
இனங்காட்டிகள் | |
25041-70-7 | |
யேமல் -3D படிமங்கள் | Image |
| |
பண்புகள் | |
(IO)2SO4 | |
வாய்ப்பாட்டு எடை | 381.87 கி/மோல் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுஅயோடிக் அமிலமும் கந்தக அமிலமும் சேர்ந்து வினைபுரிந்து ஈரயோடோசில் சல்பேட்டு உருவாகிறது:
- 2 HIO3 + H2SO4 → (IO)2SO4 + O2 + 2 H2O
கந்தக அமிலத்திலுள்ள அயோடின் கரைசல் வழியாக ஓசோனாக்கப்பட்ட ஆக்சிசனைச் சேர்த்தால் வினை நிகழ்ந்து ஈரயோடோசில் சல்பேட்டு உருவாகிறது.
- I2 + 3 O3 + H2SO4 → (IO)2SO4 + 3 O2 + H2O
இயற்பியல் பண்புகள்
தொகுஈரயோடோசில் சல்பேட்டு மஞ்சள் நிறத்தில் நீருறிஞ்சும் படிகங்களாக உருவாகிறது. குளிர்ந்த நீரில் குறைவாகக் கரைகிறது.[2]
அடர் கந்தக அமிலத்தில் ஈரயோடோசில் சல்பேட்டு கரையும். பின்னர் இதை இக்கரைசலில் இருந்து மறுபடிகமாக்கலாம்.
வேதிப் பண்புகள்
தொகுவளிமண்டல ஈரப்பதத்தின் செல்வாக்கினால் ஈரயோடோசில் சல்பேட்டு நீராற்பகுப்புக்கு உட்பட்டு அயோடின், அயோடிக் அமிலம் மற்றும் கந்தக அமிலமாக சிதைகிறது.
ஈரயோடோசில் சல்பேட்டை சூடுபடுத்தினாலும் சிதைவடைகிறது:[3]
- 4(IO) 2 SO 4 → 2I2O5 + 2I2 + 4SO3 + O2
கந்தக(VI) ஆக்சைடுடன் ஈரயோடோசில் சல்பேட்டு வினையில் ஈடுபடுகிறது:[4]
- (IO)2SO4 + 2SO3 → I2(SO4)3
அடர் கந்தக அமிலத்துடன் சேர்ந்து ஓர் அமில உப்பை ஈரயோடோசில் சல்பேட்டு உருவாக்குகிறது:
- (IO)2SO4 + H2SO4 → 2 IOHSO4
மேற்கோள்கள்
தொகு- ↑ Gillespie, R. J.; Senior, J. B. (July 5, 1964). "Cations and Oxy Cations of Iodine. II. Solutions of Iodosyl Sulfate, Iodine Dioxide, and Iodic Acid-Iodine Mixtures in Sulfuric Acid and Dilute Oleum". Inorganic Chemistry 3 (7): 972–977. doi:10.1021/ic50017a010. https://pubs.acs.org/doi/abs/10.1021/ic50017a010.
- ↑ "Chemistry of inorganic sulfonates and sulfates of polyvalent iodine". Russian Chemical Reviews 66. 1997. https://www.russchemrev.org/RCR282pdf.
- ↑ Dasent, W. E.; Waddington, T. C. (January 1, 1960). "670. Iodine oxygen compounds. Part II. Iodosyl and related compounds". Journal of the Chemical Society (Resumed): 3350–3356. doi:10.1039/JR9600003350. https://pubs.rsc.org/en/content/articlelanding/1960/jr/jr9600003350.
- ↑ Argument, Cyril (1944). "The iodous sulphates". Durham theses (Durham University): p. 22. https://etheses.dur.ac.uk/9113/.