ஈரானில் மனித உரிமைகள்

ஈரானில் மனித உரிமைகள் என்பது அனைத்து மனிதர்களுக்குமான அடிப்படை மனித உரிமைகள் எந்தளவு ஈரானில் பேணப்படுகின்றன என்பது பற்றியது. மிக மோசமான மனித உரிமை மீறல்களுக்காக ஈரானிய அரசு மீது ஐ.நா, மனித உரிமை அமைப்புகள், மேற்குநாடுகளால் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. பல நாடுகள் பொருளாதாரத் தடை போன்ற வேறு பல தடைகளையும் விதித்துள்ளார்கள். சமயச் சுதந்திரம், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம், ஊடகச் சுதந்திரம், அரசியல் பங்களிப்பு உரிமைகள், சிறுபான்மையினர் உரிமைகள் போன்ற அடிப்படை மனித உரிமைகளே ஈரானில் மதிக்கப்படுவதில்லை என்று கூறப்படுகிறது.