ஈர்ப்பு வில்லை

வெகுதூரத்தே ஒரு பொருளிலிருந்து (உதாரணமாக தூரத்திலுள்ள ஒரு விண்மீன் பேரடை) வரும் ஒளியை வளைக்கக்கூடிய பார்ப்பவருக்கும் ஒளிமுதலுக்கும் இடையிலுள்ள ஒரு மிகப்பெரும் பொருளே (உதாரணமாக ஒரு பெரும் விண்மீன் பேரடைத் திரள்) ஈர்ப்பு வில்லை (Gravitational lens) எனப்படும். இது எய்ன்ஸ்டினின் பொதுச் சார்புக் கோட்பாடு மூலம் கண்டறியப்பட்ட ஒரு வானியல் நிகழ்வாகும். இவ்வாறான ஒரு நிகழ்வு பற்றி முதன்முதல் கருத்துக்களை ஒரெஸ்ட் ச்வொல்ஸன் என்பவர் 1924ஆம் ஆண்டு வெளியிட்டாலும், 1936இல் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் என்ற அறிவியலாளரால் வெளியிடப்பட்ட கட்டுரை இந்நிகழ்வை தெளிவாக விளக்குவதாய் அமைந்தது. இதன்படி நேராக மாத்திரமே செல்லும் எனக் கருதப்பட்ட ஒளியை ஈர்ப்பு விசையினால் வளைக்க முடியுமெனத் தெரிவித்தார்.

தூரத்தே இருந்து வரும் ஒளி இடையில் உள்ள ஒரு பெரிய பொருளால் வளைக்கப்படுகின்றது.
ஒரு குவாசரிலிருந்து வரும் ஒளி நடுவிலுள்ள ஒரு விண்மீன் பேரடைத் திரளால் வளைக்கப்பட்டு ஐன்ஸ்டைன் சிலுவையை உருவாக்குகின்றது. இதனால் ஒரு பொருள் நான்கு பொருட்களாகத் தென்படுகின்றது.
பின்னே உள்ள விண்மீன் பேரடையை ஒரு கருங்குழி கடந்து செல்லும்போது ஏற்படும் ஈர்ப்பு வில்லை விளைவு.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈர்ப்பு_வில்லை&oldid=2745741" இலிருந்து மீள்விக்கப்பட்டது