ஈலியான்
ஈலியான் (Helion) என்பது ஈலியம் அணுவின் உட்கருவைக் குறிக்கிறது. இதன் குறியீடு h ஆகும். இது இரட்டிப்பு நேர்மறை மின்னூட்டம் கொண்டிருக்கும். ஈலியம் மற்றும் ஈலியம் அயனி ஆகிய இரண்டுக்குமான ஒட்டுச்சொல் ஈலியான் என்பதாகும். நடைமுறையில் குறிப்பாக இரண்டு புரோட்டான்கள் மற்றும் ஒரு நியூட்ரான் கொண்ட ஈலியம்-3 ஐசோடோப்பின் உட்கருவை இது குறிக்கிறது. இரண்டு புரோட்டான்கள் மற்றும் இரண்டு நியூட்ரான்களைக் கொண்ட ஈலியத்தின் மற்றொரு நிலையான ஐசோடோப்பு ஈலியம்-4 ஆகும். இது ஆல்பா துகள் என்று அழைக்கப்படுகிறது.
இந்த ஆல்பா துகள் ஐதரசனின் ஐசோடோப்பான டிரிட்டியத்தின் பீட்டா-சிதைவின் சேய் தயாரிப்பு ஆகும்:
பன்னாட்டு அறிவியல் மன்றத்தின் ஈலியம் துகளின் நிறையை mh = 5.0064127796(15)×10−27 கிலோகிராம் = 3.014932247175(97) டால்டன்.[1] என அறிவித்துள்ளது.[2]
விண்மீன்கள் இணைவில் புரோட்டான்-புரோட்டான் சங்கிலி வினையில் ஈலியான்கள் இடைநிலை பொருள்களாக உருவாகின்றன.
எதிரீலியான் என்பது ஓர் ஈலியானின் எதிர் துகள் ஆகும். இதில் இரண்டு எதிர்ப்புரோட்டான்களும் ஓர் எதிர்நீயூட்ரானும் கொண்டிருக்கும் துகளாகும்.