ஈழநாதம்
இலங்கை பத்திரிகை
ஈழநாதம் (Eelanatham) இலங்கையின் தமிழீழப் பகுதிகளில் வெளிவந்த ஒரு நாளிதழ் ஆகும். தமிழ் தேசியவாத முன்னோக்கு கொண்டதாகவும், புலிகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டை ஊக்குவித்ததாகவும் இப்பத்திரிகை அறியப்பட்டது.
வகை | தினசரி |
---|---|
அரசியல் சார்பு | தமிழ் தேசியம் |
மொழி | தமிழ் |
தலைமையகம் | கிளிநொச்சி, இலங்கை [1] |
ஆரம்பமும், முடிவும்
தொகு1990 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19 அன்று யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த நாளிதழ், பல்வேறு இடையூறுகளுக்கு இடையே தொடர்ந்து செயற்பட்டது. செய்தித்தாள் பல முறை தாக்கப்பட்டது.
2009 ஆம் ஆண்டில் நடந்த இறுதிப் போரின்போதும், முள்ளிவாய்க்கால் பகுதியில் ஈழநாதம் இயங்கி வந்தது. 10 மே 2009 அன்று எறிகணைத் தாக்குதல்களில் கணினிகள் முழுவதுமாக சேதமடைந்ததால், பணியினை தொடர இயலாமல் நிறுத்தப்பட்டது. இதன் ஊழியர்கள் பலர் துணை இராணுவக் குழுக்கள் மற்றும் பிற சக்திகளால் படுகொலை செய்யப்பட்டனர். [2][3][4][5][6][7][8]
மேற்கோள்கள்
தொகு- ↑ ""Colombo will mislead the world on aid distribution"- Kilinochchi paper". Tamilnet. 23 January 2005. பார்க்கப்பட்ட நாள் 1 July 2021.
- ↑ United States. Department of State (2006). Country Reports on Human Rights Practices for 2005: Report Submitted to the Committee on International Relations, U.S. House of Representatives and the Committee on Foreign Relations, U.S. Senate. U.S. Government Printing Office. pp. 2226–. பார்க்கப்பட்ட நாள் 1 July 2021.
- ↑ "Newspaper man killed in the east". BBC. 29 June 2005. பார்க்கப்பட்ட நாள் 1 July 2021.
- ↑ "Media workers killed in 2009". Journalists for Democracy in Sri Lanka. பார்க்கப்பட்ட நாள் 1 July 2021.
- ↑ "Media workers killed in 2008". Journalists for Democracy in Sri Lanka. பார்க்கப்பட்ட நாள் 1 July 2021.
- ↑ Pradeep Jeganathan; Qadri Ismail (1995). Unmaking the Nation: The Politics of Identity and History in Modern Sri Lanka. Social Scientists' Association. p. 171. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-955-9102-07-6. பார்க்கப்பட்ட நாள் 1 July 2021.
- ↑ Towards Peace in Sri Lanka. Rupa & Company. 2002. p. 20. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7167-983-6. பார்க்கப்பட்ட நாள் 1 July 2021.
- ↑ "Remains of Eelanatham Journalist cremated in Kilinochchi". Tamilnet. 18 January 2007. பார்க்கப்பட்ட நாள் 1 July 2021.