ஈ. பாலகுருசாமி

ஈ. பாலகுருசாமி என்பவர் கல்வியாளர், பொறியாளர் மற்றும் நூலாசிரியர் ஆவார். [1] இவர் அண்ணா பல்கலைக்கழகத் துணை வேந்தராக இருந்தவர். தமிழ் நாடு மாநில திட்டக்குழு உறுப்பினரும் ஆவார். யூனியன் பப்ளிக் சர்வீசு குழுவில் உறுப்பினராகவும் இருந்தார். கணினி நிரலாக்க நூல்கள் நிரம்ப எழுதியுள்ளார். தகவல் மற்றும் கணினி தொடர்பான நூல்கள் 35 க்கும் மேல் எழுதியுள்ளார்.

ஈ. பாலகுருசாமி
பிறப்பு16 அக்டோபர் 1945 (அகவை 79)
கரூர்
படித்த இடங்கள்

பெற்ற கல்வி

தொகு

மின்பொறியியலில் முதுஅறிவியல் பட்டமும், சிஸ்டம்ஸ் பொறியியலில் ஆய்வுப்பட்டமும் ரூர்க்கி பல்கலைக்கழகத்தில் பெற்றார். ஐக்கிய ராஜ்ஜியத்தில் கல்வியியலில் டிப்ளமா பட்டம் பெற்றவர்.[2]

வகித்த பிற பதவிகள்

தொகு
  • கோயம்புத்தூர் ஈ பி ஜி அறக்கட்டளையின் தலைவராகவும், கோயம்புத்தூர் அறிவியல் மன்றத்தின் தலைவராகவும் இருக்கிறார்.
  • மின்னணுவியல் மற்றும் தொலைத் தொடர்பு நிறுவனத்திலும் இந்தியப் பொறியாளர்கள் நிறுவனத்திலும் தகை சால் உறுப்பினராக இருந்தார்.
  • பெல், நிட், போபால் தொழில்நுட்ப ஆசிரியர்கள் பயிற்சி நிலையம், ஐதராபாத் பொதுத் துறை நிறுவனம் ஆகியவற்றில் ஆலோசகராக இருக்கிறார். 

  இங்கிலாந்து, அமெரிக்கா, ஐரோப்பா, சிங்கப்பூர், சீனா, தாய்லாந்து, மெக்சிகோ, அரபு நாடுகள் போன்ற நாடுகளுக்குப் பயணம் செய்துள்ளார். 

சான்றாவணம்

தொகு
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-06-03. பார்க்கப்பட்ட நாள் 2017-05-30.
  2. http://iasexamportal.com/civilservices/forum/profile-upsc-member-professor-e-balagurusamy
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈ._பாலகுருசாமி&oldid=3544760" இலிருந்து மீள்விக்கப்பட்டது