உக்கிரன் கோட்டை
உக்கிரன்கோட்டை திருநெல்வேலி மாவட்டம், தென்காசி வட்டம், ஆலங்குளம் தாலுகாவிலுள்ள ஒரு கிராமமாகும். இவ்வூரைச்சுற்றி நிறைய சாஸ்தா கோவில்கள் அமைந்துள்ளன. [சான்று தேவை]
பாண்டியர்
தொகுஇக்கிராமம் பாண்டியர்களுடன் நெருங்கிய தொடர்பு பெற்றது. இதை ஆண்ட உக்கிரம பாண்டியனின் நினைவாக இவ்வூர் உக்கிரன் கோட்டை எனப்பெயர் பெற்றது என ஒரு கருதுகோள் உண்டு.[1] தென்காசியை மையமாக கொண்டு ஆண்ட பாண்டியர்களின் காலத்தில் இது தலைமை படைத்தளமாக விளங்கியது.[2]
இன்னும் அகழிகளின் எச்சங்கள் காணப்படுகின்றன. சிவன் கோயிலில் இருந்து சுரங்கப் பாதை ஒன்று தரைக்குள் செல்கிறது. சமீபத்தில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இங்கு பல புராதானப் பொருள்களை கண்டறிந்து உள்ளனர்.[3]