உசைன்சாகர் விரைவுவண்டி

உசைன்சாகர் எக்ஸ்பிரஸ் (Hussainsagar Express) தெற்கு மத்திய ரயில்வேயினால், ஹைதராபாத்-மும்பைக்கிடையே செயல்படுபடும் முக்கிய ரயில்சேவை ஆகும். 1993 ஆம் ஆண்டின் மத்திய மாதங்களில் (7001 / 7002) தாதர், ஹைதராபாத் ஆகியவற்றிற்கு இடையே வாரம் இருமுறை செயல்படும் ரயில்சேவையாக தொடங்கப்பட்டது. விரைவிலேயே, 1994 ஆம் ஆண்டு தினசரி ரயில்சேவையாக (2101 / 2102) மாறியது. அப்போது மும்பையின் வி.டி நிலையத்துக்கும் செகந்திரபாத்திற்கும் இடையே இந்த ரயில்சேவை செயல்படும் என்று அறிவிக்கப்பட்டது. தற்போதும் தினசரி அதிவிரைவு ரயில்சேவையாக 2701/2702 என்ற எண்ணுடன் செயல்படுகிறது.

உசைன்சாகர் விரைவுவண்டி
உசைன்சாகர் விரைவுவண்டி
கண்ணோட்டம்
வகைநகரங்களிடைத் தொடர்வண்டி (Inter-city rail)
நிகழ்நிலைஇயக்கத்தில்
நிகழ்வு இயலிடம்தெலுங்கானா, மகாராட்டிரம்
நடத்துனர்(கள்)தெற்கு மத்திய ரயில்வே, இந்திய ரயில்வே
வழி
தொடக்கம்ஹைதராபாத் டெக்கான்
இடைநிறுத்தங்கள்17
முடிவுமும்பை சிஎஸ்டி
ஓடும் தூரம்790 km (490 mi)
சராசரி பயண நேரம்13 மணி, 45 நிமிடங்கள்
சேவைகளின் காலஅளவுநாள்தோறும்
பயணச் சேவைகள்
வகுப்பு(கள்)படுக்கை வசதி, குளிர்சாதனம், பொது
உணவு வசதிகள்Pantry
காணும் வசதிகள்அனைத்துப் பெட்டிகளிலும் பெரிய சாளரங்கள்
சுமைதாங்கி வசதிகள்இருக்கைகளுக்கு அடியில்
தொழில்நுட்பத் தரவுகள்
சுழலிருப்புஇரண்டு
பாதைஅகலப்பாதை
வேகம்58.7 km/h
வழிகாட்டுக் குறிப்புப் படம்

சொற்பிறப்பு

தொகு
 
The Hussain Sagar Lake in Hyderabad

ஹைதராபத்தில் உள்ள உசைன் சாகர் ஏரியினை ‘ஹஸ்ரத் உசைன் ஷாஹ் வாலி’ 1562 ஆம் ஆண்டில் ஏற்படுத்தினார். அது இப்ராஹிம் குவ்லி குத்பு ஷாஹின் ஆட்சிக்காலம் ஆகும்.[1] முதலில் மைனர் எக்ஸ்பிரஸ் என்ற பெயருடன், செகந்திரபாத்தில் இருந்து மும்பைக்கு செயல்பட்டு வந்த இந்த ரயில்சேவை, உசைன் சாகரை கௌரவிக்கும் பொருட்டு ‘உசைன்சாகர் எக்ஸ்பிரஸ்’ என்று மாற்றப்பட்டது.

வண்டி எண்

தொகு
  • 12701 – மும்பை சிஎஸ்டி – ஹைதராபாத் டெக்கான் உசைன்சாகர் எக்ஸ்பிரஸ்[2]
  • 12702 - ஹைதராபாத் டெக்கான் - மும்பை சிஎஸ்டி உசைன்சாகர் எக்ஸ்பிரஸ்[3]

இந்த ரயில்சேவை பயண தூரமான 429 மைல்களை (790 கிலோமீட்டர்) 13 மணி நேரம் மற்றும் 45 நிமிடங்களில், சராசரியாக மணிக்கு 58.7 கிலோமீட்டர் வேகத்தில் கடந்துசெல்கிறது.

இணைப்புப் பெட்டிகள்

தொகு
  • 12701 உசைன்சாகர் எக்ஸ்பிரஸ்: ENG – SLR – GEN - S10 - S9 - S8 - S7 - S6 - S5 - S4 - S3 - S2 - S1 - B2 - B1 - A1 - HA1 – GEN - SLR
  • 12702 உசைன்சாகர் எக்ஸ்பிரஸ்: ENG – SLR – GEN – GEN – GEN – GEN - S1 – GEN – GEN - SLR

இது தனது பெட்டிகளை ஹைதராபாத் - மும்பை எக்ஸ்பிரஸ் ரயில்சேவையுடன் பகிர்ந்துள்ளது.

இதர ரயில்கள்

தொகு

ஹைத்ராபாத்தையும் மும்பையையும் இணைக்கும் பிற ரயில்சேவைகளின் விவரம் பின்வருமாறு:[4]

வண்டி எண் வண்டியின் பெயர் தொடக்கம் முடிவு
18519 / 18520 LTT விசாகப்பட்டினம் எக்ஸ்பிரஸ் விசாகப்பட்டினம் மும்பை LTT
17221 / 17222 வாரம் இருமுறை எக்ஸ்பிரஸ் காக்கிநாடா மும்பை LTT
11019 / 11020 கோனார்க் எக்ஸ்பிரஸ் மும்பை CST புவனேஷ்வர்
17031 / 17032 ஹைதராபாத் மும்பை எக்ஸ்பிரஸ் ஹைதராபாத் மும்பை CST
17057 / 17058 தேவகிரி எக்ஸ்பிரஸ் செகந்திராபாத் மும்பை CST
12219 / 12220 டுரொன்டோ எக்ஸ்பிரஸ் செகந்திராபாத் மும்பை LTT
17203 / 7204 காக்கிநாடா பவநகர் எக்ஸ்பிரஸ் காக்கிநாடா பவநகர்
17017 / 17018 செகந்திராபாத் ராஜ்கோட் எக்ஸ்பிரஸ் செகந்திராபாத் ராஜ்கோட்
19201 / 19202 போர்பந்தர் செகந்திராபாத் எக்ஸ்பிரஸ் செகந்திராபாத் போர்பந்தர்

எஞ்சின்

தொகு

உசைன்சாகர் எக்ஸ்பிரஸ் WCM எஞ்சின் உதவியுடன் இழுக்கப்பட்டது, அதேபோல் மும்பை மற்றும் புனே இடையே WCAM3 / WCG2 உதவியுடனும், புனேயில் DC நிலையிலிருந்து AC ஆக மாற்றப்பட்டதில் இருந்து WDM3A டீசல் எஞ்சின் உதவியுடனும் இழுக்கப்பட்டுக் கொண்டிருந்தது. 2013 ஆம் ஆண்டின் மத்திய மாதங்களில் இருந்து இந்த எஞ்சின்கள் மாற்றப்பட்டன. தற்போது மத்திய ரயில்வேயின் கல்யாண் WDM3A/D அல்லது WDG 3 உதவியுடன் செகந்திரபாத்தில் இருந்து மும்பை சிஎஸ்டி வரையிலான பயணம் முழுவதும் ஒரே எஞ்சின் மூலம் செயல்படுகிறது.

வழிப்பாதையும் நிறுத்தங்களுக்கான நேரமும்

தொகு

உசைன்சாகர் விரைவுவண்டி புறப்படும் நேரமும் வழிப்பாதை விவரங்களும் பின்வருமாறு:[5]

போக்குவரத்து நேரம்
எண் நிலையத்தின் பெயர் (குறியீடு) வரும் நேரம் புறப்படும் நேரம் நிற்கும் நேரம்
(நிமிடங்கள்)
கடந்த தொலைவு (கி.மீ) நாள் பாதை
1 ஹைதராபாத் டெக்கன் (HYB) தொடக்கம் 14:45 0 0 1 1
2 பேகம்பேட் (BMT) 14:55 14:57 2 6 1 1
3 விக்ரபாத் சந்திப்பு (VKB) 16:00 16:02 2 74 1 1
4 தந்தூர் (TDU) 16:39 16:40 1 115 1 1
5 சேரம் (SEM) 17:08 17:09 1 148 1 1
6 மல்காய்ட் சாலை (MQR) 17:17 17:18 1 161 1 1
7 சித்தபூர் (CT) 17:37 17:38 1 170 1 1
8 வாடி (WADI) 18:05 18:10 5 185 1 1
9 ஷஹாபாத் (SDB) 18:21 18:23 2 196 1 1
10 குல்பர்கா (GR) 18:47 18:50 3 222 1 1
11 கனகபூர் சாலை (GUR) 19:16 19:18 2 249 1 1
12 சோலாப்பூர் சந்திப்பு (SUR) 20:50 21:00 10 335 1 1
13 குர்துவாடி (KWV) 22:08 22:10 2 414 1 1
14 புனே சந்திப்பு (PUNE) 01:10 01:15 5 598 2 1
15 கல்யாண் சந்திப்பு (KYN) 03:43 03:45 2 737 2 1
16 தாதர் (DR) 04:25 04:30 5 781 2 1
17 மும்பை சிஎஸ்டி (CSTM) 04:55 முடிவு 0 790 2 1

மேற்கோள்கள்

தொகு
  1. https://www.irfca.org/faq/faq-name.html
  2. "India Rail Info -Hussainsagar Express 2701". indiarailinfo.com.
  3. "India Rail Info:Hussainsagar Express - (2702)". indiarailinfo.com.
  4. "Trains between Mumbai and Hyderabad". India Railway Information. பார்க்கப்பட்ட நாள் 2007-01-15.
  5. https://indiarailinfo.com/train/-train-hussain-sagar-sf-express-12701/667/12282/834
"https://ta.wikipedia.org/w/index.php?title=உசைன்சாகர்_விரைவுவண்டி&oldid=3759962" இலிருந்து மீள்விக்கப்பட்டது