உச்சுசாக்குவைட்டு

சலொபோவுப்புக் கனிமம்

உச்சுசாக்குவைட்டு (Uchucchacuaite) என்பது AgMnPb3Sb5S12 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும். அரிய சல்போவுப்புக் கனிமமான இது நீர்வெப்ப படிவுகளில் காணப்படுகிறது.

உச்சுசாக்குவைட்டு Uchucchacuaite
அணியாக உச்சுசாக்குவைட்டு
பொதுவானாவை
வகைசல்போவுப்புக் கனிமம்
வேதி வாய்பாடுAgMnPb3Sb5S12
இனங்காணல்
நிறம்சாம்பல்
படிக அமைப்புசெஞ்சாய்சதுரப் படிகம்
மிளிர்வுஉலோகத்தன்மை
ஒளிஊடுருவும் தன்மைஒளிபுகாது
மேற்கோள்கள்[1]

1984 ஆம் ஆண்டில் பெரு நாட்டில் ஓயோன் மாகாணத்தின் லிமா துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சாக்சோனி மாநிலத்திலுள்ள உச்சுசாக்குவா சுரங்கத்தில் முதன்முதலில் உச்சுசாக்குவைட்டு கண்டறியப்பட்டது. இச்சுரங்கத்தின் பெயரே கனிமத்திற்கும் சூட்டப்பட்டது. சப்பான் நாட்டின் ஒக்கைடோவில் உள்ள சுரங்கத்திலும் கிடைப்பதாக அறியப்படுகிறது ref name=Mindat/>. பொதுவாக பெரு நாட்டில் அலாபேண்டைட்டு, கலீனா, பெனாவிடெசைட்டு, சிபேலரைட்டு, பைரைட்டு, பைரோடைட்டு, ஆர்சனோபைரைட்டு போன்ற கனிமங்களுடன் சேர்ந்து காணப்படுகிறது [2].

பன்னாட்டு கனிமவியல் சங்கம் உச்சுசாக்குவைட்டு கனிமத்தை Uch[3] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. Mindat
  2. Handbook of Mineralogy
  3. Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=உச்சுசாக்குவைட்டு&oldid=4091835" இலிருந்து மீள்விக்கப்பட்டது