உடனடிவிளைவும் தாமத விளைவும்

உடனடிவிளைவும் தாமத விளைவும் (Immediate effect and delayed effect); அயனியாக்கும் கதிர்கள் உயிர் வாழ்வனவற்றில் பல வேண்டப்படாத விளைவுகளையும் தோற்றுவிக்கின்றன. இவ்விளைவுகள் ஏற்றுக் கொண்ட கதிர் ஏற்பளவினைப் பொறுத்து இருக்கின்றன. குறுகிய காலத்தில் அதிகக் கதிர்ஏற்பளவு உடனடி விளைவுகளைத் தோற்றுவிக்கின்றன. வாந்தி, குமட்டல், குருதி எண்ணிக்கைகளில் மாற்றம், முடி உதிர்தல், மலட்டுத்தன்மை முதலிய விளைவுகளை உண்டாக்குகின்றன. குறைந்த அல்லது கொஞ்சம் கொஞ்சமாக தொடர்ந்து ஒருவர் பெறும் ஏற்பளவு இரத்தப் புற்று, பிற இடங்களில் புற்று, கண்புரை போன்ற நோய்களைத் தோற்றுவிக்கலாம். இது காலம் தாழ்ந்து தோன்றுவதால் தாமத விளைவு எனப்படும்.

ஆதாரம்

தொகு
  • BARC notes