உடனிலை என்பது புறநானூற்றுப் பாடல்களுக்குத் தரப்பட்டுள்ள துறைகளில் ஒன்று. 400 பாடல்களில் 58 எண்ணுள்ள ஒரே ஒரு பாடல் மட்டும் உடனிலை என்னும் துறையாகக் காட்டப்பட்டுள்ளது. இது பாடாண் திணையின் துறைகளில் ஒன்று.

தொல்காப்பியம், புறப்பொருள் வெண்பாமாலை என்னும் இலக்கண நூல்களில் இத் துறை பற்றிய குறிப்பு இல்லை. மறைந்துபோன பன்னிரு படலம் நூலின் வழி இக்குறிப்பு தரப்பட்டிருகலாம்.

இரண்டு பாட்டுடைத் தலைவர்கள் ஓரிடத்தில் ஒன்றுசேர்ந்து இருப்பதைப் போற்றுவது உடனிலை என்னும் துறை.

  • சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன்
  • பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி

ஆகியோர் ஓரிடத்தில் (புகார் அரண்மனையில்) இருப்பது கண்ட புலவர் காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக் கண்ணனார் இன்றுபோல் என்றும் உடனிலை திரியாமல் இருக்கவேண்டும் என்று அவர்களை வாழ்த்திப் பாடிய பாடல் இது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=உடனிலை&oldid=4163204" இலிருந்து மீள்விக்கப்பட்டது