உடுப்பிட்டி மகளிர் கல்லூரி

உடுப்பிட்டி மகளிர் கல்லூரி இலங்கையின் வட மாகாணத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் வடமராட்சிப் பகுதியில் உடுப்பிட்டி என்ற ஊரில் அமைந்துள்ள பாடசாலை ஆகும். இப்பாடசாலை 1868 மே 07 இல் அமெரிக்க மிசனரிகளினால் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பாடசாலை இன்று க.பொ.த உயர்தரம் வரை வகுப்புக்களை கொண்டுள்ளது. இங்கு உயர்தரத்தில் உயிரியல், கணிதம், வர்த்தகம். கலை ஆகிய நான்கு பிரிவுகளும் கற்பிக்கப்படுகின்றன.