உடையார்கட்டு மகா வித்தியாலயம்

இலங்கை, வட மாகாணத்தில் உள்ள பள்ளி

உடையார்கட்டு மகா வித்தியாலயம் இலங்கையில் வட மாகாணத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு உயர்தரப் பாடசாலை ஆகும். இது பரந்தன்-முல்லைத்தீவு வீதியில் 25ஆவது கிலோமீட்டரில் அமைந்துள்ளது.

மு/உடையார்கட்டு மகா வித்தியாலயம்
Mu/Udaiyarkaddu Maha Vidyalayam
முகவரி
பரந்தன்-முல்லைத்தீவு வீதி
உடையார்கட்டு, வட மாகாணம்
இலங்கை
அமைவிடம்9°21′17.8″N 80°36′32.11″E / 9.354944°N 80.6089194°E / 9.354944; 80.6089194
தகவல்
வகைமாகாணப் பாடசாலை 1AB
குறிக்கோள்யாதும் ஊரே யாவரும் கேளிர்
(All of us are relatives and all are our places)
நிறுவல்ஏப்ரல் 1, 1974
பள்ளி மாவட்டம்முல்லைத்தீவுக் கல்வி வலயம்
ஆணையம்கல்வி அமைச்சு, இலங்கை
அதிபர்வி. ஸ்ரீகரன்
ஆசிரியர் குழு55
தரங்கள்6 முதல் 13 வரை
மாணவர்கள்955
கற்பித்தல் மொழிதமிழ்

வரலாறு

தொகு

உடையார்கட்டு மகா வித்தியாலயம் 1974 ஏப்ரல் 1 இல் உடையார்கட்டு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டது. முதலாவது அதிபராக திரு. சின்னராசா என்பவர் நியமிக்கப்பட்டு பணியாற்றினார். இப்பாடசாலையில் 1986-ஆம் ஆண்டு முதற்தடவையாகக் க.பொ.த சா.த பரீட்சைக்குத் தோற்றினார்கள். 1993 ஆம் ஆண்டு உயர்தர கலைப்பிரிவு ஆரம்பிக்கப்பட்டு பாடசாலையும் மகா வித்தியாலயமாகத் தரமுயர்த்தப்பட்டது. பாடசாலை வரலாற்றின் 1998ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சையில் ஒரே தடவையில் 9 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகிச் சென்றனர்.

தரம் 1 தொடக்கம் 13 வரை இயங்கி வந்த வகுப்புகள் புதிய கல்விச் சீர்திருத்திற்கமைய 1000 பாடசாலை அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 2012 ஆகத்து 1 தொடக்கம் ஆரம்பப் பிரிவு வேறாக்கப்பட்டு மு/உடையார்கட்டு மகா வித்தியாலயத்திற்கு முன்பாக இயங்குகின்றது. இப்பாடசாலையில் தற்போது தரம் 6 முதல் 13 வரையான வகுப்புக்கள் உள்ளன. 2013 இல் உயர்தர வகுப்பில் கணித விஞ்ஞானப் பிரிவு ஆரம்பிக்கப்பட்டது.

2019 ஆம் ஆண்டில் பாடசாலையில் 55 ஆசிரியர்களும் 955 மாணவர்களும் உள்ளனர்.

அதிபர்கள்

தொகு
  1. சின்னராசா (01.04.1974 - 14.01.1975)
  2. சங்கரப்பிள்ளை (15.01.1975 - 16.10.1983)
  3. சிவப்பிரகாசம் (17.10.1983 - 28.02.1984)
  4. விசுவநாதர் (01.03.1984 - 31.12.1989)
  5. திருச்செல்வராசா (01.01.1990 - 31.08.1996)
  6. பரமேஸ்வரன் (01.01.1996 - 02.03.2000)
  7. ராஜா (03.03.2000 - 21.04.2003)
  8. பேரின்பராணி (22.04.2003 - 21.04.2004)
  9. ராஜா (22.04.2004 - 28.02.2006)
  10. ராஜ்குமார் (01.03.2006 - 31.04.2007)
  11. ரவீந்திரராசா (01.05.2007 - 31.08.2007)
  12. ராமநாதன்(01.09.2008 - 07.08.2011)
  13. தயாபரன் (08.08.211 - 22.02.2012)
  14. ஸ்ரீகரன் (23.02.2012-)

பாடசாலைப் பண்

தொகு

உடையார்கட்டு மகா வித்தியாலயம்
உயர்வுடன் வாழ வாழ்த்துகிறோம்
வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
                                                           (உடையார்கட்டு மகா வித்தியாலயம்)

செந்தமிழ் ஆங்கிலம் சிந்தைகொள் சமயம்
தந்து சமூகத்துடன் உயர்கலை வர்த்தகம்
கணிதம், விஞ்ஞானம் தொழில்நுட்பம் ஈந்தாய்
வந்தனை செய்தோம் வாழியவே
                                                           (உடையார்கட்டு மகா வித்தியாலயம்)

எழுபத்துநான்கு சித்திரை ஒன்றில்
செழுமையுடன் தோன்றி திகழ்ந்தனையே
தரம் ஆறு முதலாய் பதின்மூன்று வரைக்கும்
தகுதியுடன் திகழ்ந்தாய் வாழியவே
                                                           (உடையார்கட்டு மகா வித்தியாலயம்)

மதிநிறை அதிபர் மகத்தான ஆசிரியர்
துதித்திட மாணவர் தொண்டுறு பெற்றோர்
கதியிதி எனவே கனிவுடன் வாழ்த்துவோம்
பதியென நினைத்தே பணிந்து நாம் போற்றுவோம்

வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
                                                           (உடையார்கட்டு மகா வித்தியாலயம்)

பாடசாலையின் பணிக்கூற்றும் தூரநோக்கும்

தொகு

பணிக்கூற்று

தொகு

தேசியக் கல்விக் குறிக்கோளுக்கமைவாக வினைத்திறன் மிக்க ஆளணியினர் மூலம் பொருத்தமான பௌதீக வளங்களை உச்சமாகப் பயன்படுத்தி இன்றைய மாணவச் செல்வங்களை நாளைய வெற்றியாளர்களாக உருவாக்குவோம்.

தூரநோக்கு

தொகு

அர்பணிப்புடன் செயலாற்றி வினைத்திறன் மிக்க வெற்றியாளர்களை உருவாக்குவோம்.

இல்லங்கள்

தொகு
  1. பாரதி
  2. இளங்கோ
  3. வள்ளுவர்

பாடசாலையின் நிறம் : பச்சை