உடையார்கோயில் வெங்கடாஜலபதி கோயில்
இருப்பிடம்
தொகுஇக்கோயில் கோயில் தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர்-நாகப்பட்டினம் சாலையில் தஞ்சாவூரிலிருந்து 18 கிமீ தொலைவில் சாலியமங்கலம் அருகே உள்ள உடையார்கோயில் என்னும் சிற்றூரில் உள்ளது.
மூலவர்
தொகுஇக்கோயிலின் கருவறையில் வெங்கடாஜலபதி ஸ்ரீதேவி, பூதேவியுடன் உள்ளார். [1]
குடமுழுக்கு
தொகுஇக்கோயிலின் குடமுழுக்கு 31.5.2015 அன்று நடைபெற்றது. காலை 7.00 மணிக்கு விஸ்வரூபத்துடன் விழா நிகழ்வுகள் தொடங்கின. மூன்றாம் கால பூஜைக்குப் பின் 9.30 மணி முதல் 10.30 மணிக்குள் யாத்ராதானம், கடம் புறப்பாடு போன்றவை நிகழ்ந்தன. பின் விமானங்களுக்குப் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.[1]
அருகேயுள்ள கோயில்
தொகுஇவ்வூரில் உடையார்கோயில் என்னும் பெயரில் உள்ள கரவந்தீஸ்வரர் கோயில் உள்ளது.