உட்கரு பாலறிதல்
உட்கரு பாலறிதல் (Nuclear sexing) என்பது XX நிறப்புரி இணையாக இருக்கும் சிற்றினங்களில் நிறப்புரி பாலின நிர்ணய நுட்பமாகும். உடல் உயிரணுக்களில் உட்கருவின் விளிம்பில் அமைந்துள்ள முருங்கைக்காயை ஒத்த பார் உடலைக் கண்டறிவதன் மூலம் உட்கரு பாலறிதலைச் செய்யலாம். பார் உடல் என்பது செயலற்ற X நிறப்புரி ஆகும். இது உடல் உயிரணுக்களில் உட்கருவில் செறிவுற்று காணப்படும். பொதுவான மனித (அல்லது XY-அடிப்படையிலான பிற உயிரினம்) பெண் உடல் உயிரணுவில் ஒரு பார் உடல் மட்டும் காணப்படும். ஆனால் மனித ஆண் உயிரணுவில் இது காணப்படாது. எந்தவொரு மனித உயிரணுவிலும் ஒரு பார் உடலைத் தேடலாம் என்றாலும், இரத்த ஓட்டத்தில் உள்ள ஒற்றை உட்கரு உயிரணுக்கள் பொதுவாக இந்த நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்படுகின்றன. இந்த உயிரணுக்கள் ஆய்வுக்கூடத்தில் வளர்க்கப்பட்டு, அனுப்பிரிவுநிலையில் இழையுருப்பிரிவினைத் தடுக்க கோல்செமிட் போன்ற இரசாயனங்கள் பயன்படுத்தி அறியப்படுகிறது.[1] குறைந்தபட்சம் 30 சதவிகிதம் பாலின குரோமாடின் கொண்ட உயிரணுவின் மரபணு பெண் பாலினத்தைக் குறிக்கிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Barr, M. L.; Bertram, E. G. (1949-04-30). "A morphological distinction between neurones of the male and female, and the behaviour of the nucleolar satellite during accelerated nucleoprotein synthesis". Nature 163 (4148): 676. doi:10.1038/163676a0. பன்னாட்டுத் தர தொடர் எண்:0028-0836. பப்மெட்:18120749. Bibcode: 1949Natur.163..676B.