உணர்மானவியல்
உணர்மானவியல் (Sensitometry) என்பது ஒளி-உணர் பொருட்களைப் பற்றி, குறிப்பாக ஒளிப்படத் தாள் பற்றி அறியும் ஓர் அறிவியல் ஆகும். உணர்மானவியல் பற்றி 1876 ஆம் ஆண்டு வாக்கில் பெர்டினாண்டு ஹர்ட்லர், மற்றும் வேரோ சார்ல்சு டிரைஃபீல்டு ஆகியோர் முதன் முதலாக ஆரம்ப-கால கருப்பு-வெள்ளை ஒளிப்படக்குழம்பு மூலம் அறிந்தனர்.[2][3] வெள்ளியின் அடர்த்தியானது, பெறப்படும் ஒளியின் அளவு, ஒளிப்படத் துலக்கம், மற்றும் துலக்கும் முறை ஆகியவற்றுடன் எவ்வாறு வேறுபடுகிறது என்பதை இவர்கள் கண்டறிந்தனர்.
பண்புக் கோடு
தொகுபடல அடர்த்திக்கு (ஒளிபுகாவியல்பின் மடக்கை) எதிராக வெளிப்பாட்டின் மடக்கையின் வரைவு பண்புக் கோடு (characteristic curve) என அழைக்கப்படுகிறது. இக்கோடுகள் கர்ட்டர்-டிரைபீல்டு கோடுகள் (Hurter–Driffield curves),[4] H–D கோடுகள் (H-D curves),[4] HD கோடுகள்,[5] H & D கோடுகள்,[6] D–logE கோடுகள்,[7] அல்லது D–logH கோடுகள்.[8] எனவும் அழைக்கப்படுகின்றன.
கதிரியலில், வெவ்வேறு கதிர் வீச்சளவிற்கு (exposure) படத்தாளில் கிடைக்கும் ஒளி அடர்த்தியினை (Optic density) Y அச்சிலும் அதற்கான கதிர் வீச்சளவின் மடக்கை அளவினை X அச்சிலும் எடுத்துக் கொண்டு இது வரையப்படுகிறது. X அச்சினை அடுத்து, அதற்கு இணையாக அடர்த்தி கூடாமல் உள்ள பகுதி கால்பகுதி (Toe region) என்றும், அதனைத் தொடர்ந்து கதிர்வீச்சுக் கூடக்கூட அடர்த்தி அதிகரிக்கும் நேர்கோட்டுப்பகுதியும் அதனையும் அடுத்து தோள்பகுதி (Shoulder region) கதிர் வீச்சளவு கூடினாலும் அடர்த்தி கூடாத ஒரு பகுதியும் வரைபடத்தில் கிடைக்கிறது.
இக்கோடு,படத்தினைப் பெற பயன்படுத்தப்பட்ட நீர்மத்தின் செறிவு,அதன் வெப்ப நிலை,மேம்படுத்த தேவைப்பட்ட கால அளவு முதலியவைகளை பொறுத்து இருக்கிறது.
இவற்றையும் பார்க்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Page 10 of Raymond Davis, Jr. and F. M. Walters, Jr., Scientific Papers of the Bureau of Standards, No. 439 (Part of Vol. 18) "Sensitometry of Photographic Emulsions and a Survey of the Characteristics of Plates and Films of American Manufacture," 1922.
- ↑ Hurter, Ferdinand & Driffield, Vero Charles (1890) Photochemical Investigations and a New Method of Determination of the Sensitiveness of Photographic Plates, J. Soc. Chem. Ind. May 31, 1890.
- ↑ Mees, C. E. Kenneth (May 1954). "L. A. Jones and his Work on Photographic Sensitometry". Image, Journal of Photography of George Eastman House (Rochester, N.Y.: International Museum of Photography at George Eastman House Inc.) III (5): 34–36. http://image.eastmanhouse.org/files/GEH_1954_03_05.pdf. பார்த்த நாள்: 15 July 2014.
- ↑ 4.0 4.1 Stuart B. Palmer and Mircea S. Rogalski (1996). Advanced University Physics. Taylor & Francis. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 2-88449-065-5.
- ↑ Kenneth W. Busch and Marianna A. Busch (1990). Multielement Detection Systems for Spectrochemical Analysis. Wiley-Interscience. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-471-81974-3.
- ↑ Richard R. Carlton, Arlene McKenna Adler (2000). Principles of Radiographic Imaging: An Art and a Science. Thomson Delmar Learning. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7668-1300-2.
- ↑ Ravi P. Gupta (2003). Remote Sensing Geology. Springer. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-540-43185-3.
- ↑ Leslie D. Stroebel and Richard D. Zakia (1993). The Focal Encyclopedia of Photography. Focal Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-240-51417-3.
வெளி இணைப்புகள்
தொகு- Basic Sensitometry And Characteristics of Film (Kodak undated)[1] பரணிடப்பட்டது 2012-08-20 at the வந்தவழி இயந்திரம்
- A memorial volume containing an account of the photographic researches of Ferdinand Hurter & Vero C. Driffield ; being a reprint of their published papers, together with a history of their early work and a bibliography of later work on the same subject. (Royal Photographic Society of Great Britain 1920)