உணவுக்குப் பின்
உணவுக்குப் பின் (Postprandial) என்பது உணவு சாப்பிட்ட பிறகு என்பது பொருளாகும் [1]. இதுபோலவே உணவு சாப்பிடுவதற்கு முன்பு உள்ள நிலையை உணவுக்கு முன் ( preprandial) என்று மருத்துவத்தில் பொருள் கொள்வார்கள்.
சொற்பயன்
தொகுஉணவுக்குப் பின் என்ற சொற் பயன்பாடு ஏராளமான சூழ்நிலைகளில் பயன்படுத்தப்படுகிறது.
உணவு மற்றும் சமூகக் கலாச்சாரம்
தொகுசாப்பிட்ட பிறகு நடைபெறும் புகைப்பது அல்லது மது உள்ளிட்ட பல்வேறு வகையான பானங்களை அருந்துவது போன்ற நடவடிக்கைகள் குறிக்கிறது.
மருத்துவம்
தொகுஇரத்தத்தின் சர்க்கரை அளவை பரிசோதித்து அறிவது உணவுக்குப் பின் மேற்கொள்ளப்படும் முக்கியமான மருத்துவ நடவடிக்கை ஆகும். சாப்பிட்ட இரண்டு மணி நேரத்திற்குப் பின்னர் பொதுவாக உணவுக்குப் பின் இரத்தத்தின் சர்க்கரை அளவு காணப்படுகிறது. ஏனெனில், பொதுவாக உணவுக்குப் பின்னர்தான் இரத்தத்தில் சர்க்கரை அளவு உயர்கிறது. உணவுக்குப் பின்னர் இரத்த சர்க்கரை 180 மி.கி/டெ,லி அளவும் உணவுக்கு முன் இரத்த சர்க்கரை 70–130 மி.கி/டெ,லி அளவும் இருக்கலாமென்று அமெரிக்க நீரிழிவு நோயாளிகள் சங்கம் பரிந்துரைக்கிறது [2].
உணவுக்கு பின் என்ற நிலையின் இதர பயன்பாடுகள்:
- பெரிய விருந்துணவுக்குப் பின் இரத்த சர்க்கரை அளவில் சரிவு ஏற்படுவதுண்டு. சாதாரணமாக இருக்க வேண்டிய இரத்த சர்க்கரை அளவை விட சிறிய அளவு குறைவு உண்டாகும்.
- உணவுக்குப் பின் இரத்த சர்க்கரை அதிகரிப்பு ஏற்படுவதுண்டு. உணவுக்குப் பின் இரத்த சர்க்கரை அளவு மிகுவதை உணவுக்குப் பின் குளுக்கோசு சோதனை மூலம் இரத்த சர்க்கரை உயர்வு அளவை சோதித்து அறியலாம்.
- உணவுக்குப் பின் கடுமையான இரத்த அழுத்தக் குறைவு ஏற்படுவதுண்டு [3].
- பெரு உணவுக்குப் பின் உணவு எதிர்களித்தல் ஏற்படுவதுண்டு. வயிற்றுக்குச் சென்ற உணவு மீண்டும் வாயை நோக்கி வருதல் செரிமாணம் தொடர்பான நோய்களுக்கு அறிகுறியாகும்.
- உணவுக்குப் பின் நிகழும் ஆற்றலுற்பத்தி வீகிதம் ஒரு தற்காலிகமான வளர்சிதை மாற்ற விகிதம் ஆகும்.
உணவுக்குப் பின் செயல்முறைகள்
தொகுஉணவு உட்கொண்ட பின்னர், பல்வேறு வளர்சிதை மாற்ற செயற்பாடுகள் மூலமாக இரைப்பை குடலில் உணவு செரிமானம் அடைகிறது. சிறிய அலகுகளில் இருந்து பெரிய கரிம மூலக்கூறுகள் வளர்மாற்றம் அடைகின்றன. இணைப்பரிவு நரம்புத் தொகுதியின் நடவடிக்கைகளை அதிகரிப்பதற்காக உடலை ஓய்வு கொள்ளச் செய்து செரிமாணம் அடையச் செய்தல் என்பதுதான் உணவுக்குப் பின் என்ற சொற்றொடரின் வகைப்பாடாகும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ MedlinePlus: Medical Dictionary. "Postprandial." பரணிடப்பட்டது 2016-03-03 at the வந்தவழி இயந்திரம் Last accessed July 13, 2007.
- ↑ American Diabetes Association. January 2006 Diabetes Care. "Standards of Medical Care-Table 6 and Table 7, Correlation between A1C level and Mean Plasma Glucose Levels on Multiple Testing over 2-3 months." Vol. 29 Supplement 1 Pages 51-580.
- ↑ Merck Manual Home Health Handbook. "Postprandial Hypotension." Last revised February 2003. Last accessed July 13, 2007.