உணவுக்குழாய் நோய்
உணவுக்குழாய் நோய்கள் எனப்படுவது உணவுக்குழாயில் ஏற்படக்கூடிய நோய்களைக் குறிப்பதாகும். உணவுக்குழாய் ஒரு தசையாலான குழாய் போன்ற அமைப்பு, இது வாயில் இருந்து இரைப்பைக்கு உணவைச் செலுத்துவதில் உதவுகின்றது. கட்டமைப்புக் குறைபாடுகள், இயக்கக் கோளாறுகள், அழற்சிக் குறைபாடுகள், புற்றுநோய்கள் உட்பட்ட புத்திழையப் பெருக்கங்கள் என உணவுக்குழாயில் ஏற்படும் குறைபாடுகளை நான்கு விதமாக வகுக்கலாம். இவை பிறப்பில் இருந்து உருவாகலாம், அல்லது பின்னர் வாழ்வில் பெற்றுக்கொள்ளலாம்.
உணவுக்குழாய் நோய் | |
---|---|
தலையும் கழுத்தும். உணவுக்குழாய் கீழே அமைந்துள்ளது. | |
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள் | |
சிறப்பு | இரையகக் குடலியவியல் |
ம.பா.த | D004935 |
பலர் அமிலத்தன்மை காரணமாக அவ்வப்போது தங்கள் மார்பில் எரிச்சல் உணர்வு அனுபவிக்கின்றனர், இந்த நெஞ்செரிவு, இரையக உண்குழலியப் பின்னோட்ட நோய் காரணமாக ஏற்படும் உணவுக்குழாய் அழற்சியினால் ஏற்படுவதாகும், உணவுக்குழாய் நோய்களுள் இந்த நோய் பொதுவான இடத்தைப் பிடித்துள்ளது. உரிய சிகிச்சை இன்றிய இரையக உண்குழலியப் பின்னோட்ட நோய், பின்னர் உணவுக்குழாய்ப் புற்றுநோய் உண்டாவதற்கு வழிகோலுகின்றது.