உணவுப் பொறியியல்
உணவுப் பொறியியல் (Food engineering) ஒரு பலதுறைப் புலமாகும். இது உணவு நுண்ணுயிரியல், பயன்முறை இயற்பியல் புலங்கள், வேதியியல் , பொறியியல் ஆகிய புலங்களை உணவும் உணவுசார் தொழில்துறைகளுக்கும் பயன்படுத்துகிறது. உணவுப்பொறியியலில் வேளாண் பொறியியலும் எந்திரப் பொறியியலும் வேதிப் பொறியியலும் சார்ந்த நெறிமுறைகள் உணவுப் பொருள்களின் ஆக்கத்திலும் பதப்படுத்தலிலும் பயன்படுகின்றன. உணவுப் பொறியாளர்கள் தொழில்நுட்ப அறிவை உணவாக்கச் செலவு குறைக்கவும் உணவுப் பொருட்களை வணிகமயப்படுத்தவும் பயன்படுத்துகின்றனர். இயற்பியலும் வேதியியலும் கணிதவியலும் உணவுப் பொறியியல் பொருள்களைப் புரிதுகொள்ளவும் உணவுத் தொழில்துறையின் செயல்முறைகளை விளங்கிக் கொள்லவும் மிகவும் இன்றியமையாதவை.[1]
உணவுப் பொறியியல் பலவகைச் செயல்பாடுகளை உள்ளடக்குகிறது. உணவுப் பொறியாளர்கள் உணவாக்கம், பதப்படுத்தல், உணவு எந்திரங்கள், பொட்டலம் கட்டல், உணவுப் பொருள் உட்கூறுகளைப் பதப்படுத்தல், உணவாக்கத்துக்கான கருவியியல், கட்டுபாட்டியல் ஆகிய பணிகளை செய்கின்றனர். உணவுச் செயல்முறைத் தொழில்ங்கள் அறிவுரைஞர் குழுமங்கள், அரசு உணவுசார் முகமைகள், மருதாக்கக் குழுமங்கள் நலவாழ்வுக் குழுமங்கள் உணவுப் பொறியாளர்களைப் பணியில் அமர்த்துகின்றனர். சிறப்பு உணவுப் பொறியியல் செயல்பாடுகளில் பின்வருவன அடங்கும்:
- மருந்து/உணவுப் பொருட்கள் ஆக்கம்;
- உணவு/உயிரியல்/மருந்து சார்ந்த ஆக்கச் செயல்முறைகளை வடிவமைத்தலும் நிறுவுதலும் இயக்குதலும்;
- சுற்றுச்சூழல் காப்பு, கழிவுப்பொருள் பதப்படுத்தல் அமைப்புகளை வடிவமைத்தலும் இயக்குதலும்;
- உணவுசார் தொழில்நிறுவனங்களுக்கான சந்தைப்படுத்தலும் தொழில்நுட்ப அறிவு பகிர்தலும்.
உணவு அறிவியல்
தொகுஉணவுப் பொறியியலுக்கு உணவு அறிவியல் அடிப்படையான புலமாகும். உணவு அறிவியல், ஒரு பல்துறை அறிவியலாகும். நுண்ணுயிரியல், வேதிப் பொறியியல், உயிர்வேதியியல் போன்ற பல துறை நுட்பங்களும் உணவு அறிவியலில் பயன்படுகின்றன. உணவு அறிவியலின் சில கூறுபாடுகள் பின்வருமாறு:
- உணவுப் பாதுகாப்பு அல்லது உணவு நுண்ணுயிரியல் - உணவு மூலம் பரவும் நோய்களுக்கான காரணம், அவற்றை தடுப்பது குறித்த துறை.
- உணவுப் பதப்படுத்தல் - உணவுத் தரம் கெடாமல் பதப்படுத்துவது, கெட்டுப் போவதற்கான காரணங்களை ஆராயும் துறை.
- உணவுப் பொறியியல் - உணவாக்கத்துக்கான தொழிற்சாலை செயல்முறைகள்.
- உணவு வேதியியல் - உணவின் மூலக்கூறுக் கட்டமைப்பு, அவற்றுக்கு இடையே நிகழும் வேதிவினைகள் குறித்த துறை.
- நுகர்வு ஓர்வு- நுகர்வோரின் புலன்களுக்கு உணவை ஏற்கும் திறன், விருப்பம் குறித்து ஆயும் துறை.
- உணவுப் பொருள் உருவாக்கம் - புது உணவுப் பொருட்கள் உருவாக்கம் குறித்த ஆய்வுத் துறை.
படிப்புகள்
தொகுகீழ்வரும் படிப்புகள் உணவுப் பொறியியலோடு தொடர்புள்ளவை ஆகும்
- உணவுத் தொழில்நுட்பம் - உணவு பொருட்கள், அதற்கான இயந்திரங்கள் குறித்த தகவல்களைக் கொண்ட படிப்பு
- சமையல் தொழில்நுட்பம் - உணவு செய்முறைகள் குறித்த தகவல்களைக் கொண்ட படிப்பு.
உணவுப் பொறியியல் தலைப்புகள்
தொகுஉணவுப் பொறியியல் வளர்ச்சியின் பல அறைகூவல்களில் ஒன்று, புதிய கருவிகளையும் தொழில்நுட்பத்தையும் அறிவையும் பயன்படுத்தலே ஆகும். கணிப்புசார் பொருள் அறிவியல், நானோ தொழில்நுட்பம், புதிய பொருள்களையும் செயல்முறைகளையும் உருவாக்கல். அதேவேளையில், தரமும் பாதுகாப்பும் மேம்படுத்தல் ஆகியன உணவுப் பொறியியலின் உய்யநிலை சிக்கல்களாக விளங்குகின்றன. உணவு பாதுகாப்புக்காக புதிய பொருள்களும் நுட்பங்களும் உருவாக்கப்படுகின்றன. மேலும் இதற்காக புதிய உணவுக் காப்புத் தொழில்நுட்பமும் உருவாகிவருகிறது. கூடுதலாக, செயல்முறைக் கட்டுபாடு, தன்னியக்கம் ஆகியவை உணவுப் பொறியியலின் முன்னணித் தேவைகளாக இனங்காணப்பட்டுள்ளன. நெகிழ்தகவு உணவாக்கத்துக்காகவும் தன்னியக்கத்துக்காகவும் மேம்பட்ட கண்காணிப்பு, கட்டுபாட்டு அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும் சிக்கனமக ஆற்றலைப் பயன்படுத்தலும் சுற்றுச்சூழல் சிக்கல்களைக் குறைத்தலும் உணவுப் பொறியியலின் முதன்மையான குறிக்கோள்களக தொடர்கின்றன; கழிவுப் பொருள் மேலாண்மையிலும் கணிசமான முன்னேற்றங்களும் உணவாக்கத்தில் உமிழ்வுகளையும் கழிவுகளையும் குறைப்பதிலும் சிறப்பான முன்னேற்றங்களும் உருவாகி வருகின்றன.
உணவுப் பொறியியல் மேம்பாட்டுக்கான குறிப்பிட்ட சில தலைப்புகளாவன:
- உணவாக்கத்துக்கான பொறியியல் அலகுவினைகளின் மேம்பாடுகள்
- நீர்ம, திண்ம உணவுத் தேக்குதலும் போக்குவரத்தும் சார்ந்த முன்னேற்றங்கள்
- உணவுகளை வெதுப்பூட்டல், குளிர்த்தல் சார்ந்த வளர்ச்சிகள்
- உணவுகளில் மேம்பட்ட பொருண்மைப் பரிமாற்ற வளர்ச்சிகள்
- உணவுப் பொறியியலின் புதிய வேதி, உயிர்வேதிக் கூறுபாடுகளும் வேதிவினையியக்கப் பகுப்பாய்வும்
- நீர்ப்பிரித்தல், வெப்ப்ப் பதப்படுத்தல், வெப்பமில பதப்படுத்தல், உணவுப் பிதிர்வாக்கம், நீர்ம உணவுச் செறிவாக்கம், படலமுறைப் பதப்படுத்தல், உணவுப் பதப்படுத்தலில் படலங்களின் பயன்பாடு
- குட வாணாள், பொருள்தேக்க மேலாண்மைக்கான மின்னனியல் பதங்காட்டிகள். உணவாக்கச் செயல்முறையில் நீடிப்புதிறத் தொழில்நுட்பங்கள்
- புத்தியல் பொட்டலம் கட்டல், தூய்மித்தல், துப்புறவுத் தொழில்நுட்பங்கள்.
- தர உணரி அமைப்புகள் உருவாக்கமும் [2]
உணவுப் பாதுகாப்பு
தொகுஉணவுப் பாதுகாப்பு என்பது உணவுசார் நோய்களைத் தவிர்ப்பதற்காக, உணவு சமைத்தல், தேக்கல், கையாளல் குறித்த அறிவியல் புலமாகும். உணவால் இருவரோ அதற்கு மேற்பட்டவரோ நோய்வாய்ப்பட்டால் உணவுசார் நோய் பரவலாகக் கருதப்படும்.[8] இது உடல்நலப் பேரழிவை ஏற்படுத்தாமல் இருக்க பலவழிகளைக் கையாளவேண்டும். நுகர்வோருக்குத் தீங்கு விளையாமல் இருக்க உணவுப் பாதுகாப்புக்காக உணவுத் தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், இதற்கான வழித்தடங்களாக தொழிலகம்-சந்தை, சந்தை- நுகர்வு ஆகியவை அமைகின்றன. தொழிலகம்-சந்தை வழித்தடத்தில், உணவுப் பாதுகாப்பு சார்ந்த நடவடிக்கைகளில் உஅனவு சமைத்தல், பெயரிடல், உணவுத் துப்புரவு, உணவுச் சேர்க்கைப் பொருள்கள், உர எச்சங்கள், ஆகியவையும் உணவுசார்ந்த உயிர்த்தொழில்நுட்பக் கொள்கைகளும் ஏற்றுமதி, இறக்குமதி வழிகாட்டுதல்களும் உணவுச் சான்றளிப்புகளும் அடங்கும். சந்தை-நுகர்வு வழித்தட நடவடிக்கைகளில்லுணவைப் பாதுகாப்பாகச் சமைத்தலும் பாதுகாப்பாகப் போக்குவரத்து செய்தலும் நுகர்வோருக்குப் பாதுகாப்பாக வழங்குதலும் பகிர்ந்தளித்தலும் அமைகின்றன.
மேற்கோள்கள்
தொகு- ↑ Singh , R Paul; Dennis R. Heldman (2013). Introduction to Food Engineering (5th ed.). Academic Press. p. 1. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0123985307.
- ↑ García, MR; Cabo, ML; Herrera, JR; Ramilo-Fernández, G; Alonso, AA; Balsa-Canto, E (March 2017). "Smart sensor to predict retail fresh fish quality under ice storage.". Journal of Food Engineering 197: 87–97. doi:10.1016/j.jfoodeng.2016.11.006. https://www.researchgate.net/publication/309897138_Smart_sensor_to_predict_retail_fresh_fish_quality_under_ice_storage.
- ↑ García, MR; Vilas, C; Herrera, JR; Bernárdez, M; Balsa-Canto, E; Alonso, AA (2 September 2015). "Quality and shelf-life prediction for retail fresh hake (Merluccius merluccius).". International journal of food microbiology 208: 65–74. doi:10.1016/j.ijfoodmicro.2015.05.012. பப்மெட்:26058006.
- ↑ Mabrook, M.F.; Petty, M.C. (2003). "Effect of composition on the electrical conductance of milk". Journal of Food Engineering 60 (3): 321–325. doi:10.1016/S0260-8774(03)00054-2.
- ↑ Damez, J.L.; Clerion, S.; Abouelkaram, S.; Lepetit, J. (2008). "Beef meat electrical impedance spectroscopy and anisotropy sensing for non-invasive early assessment of meat ageing". Journal of Food Engineering 85 (1): 116–122. doi:10.1016/j.jfoodeng.2007.07.026.
- ↑ Rehman, M.; Abu Izneid, J.A.; Abdullha, M.Z.; Arshad, M.R. (2011). "Assessment of quality of fruits using impedance spectroscopy". International Journal of Food Science & Technology 46 (6): 1303–1309. doi:10.1111/j.1365-2621.2011.02636.x.
- ↑ Harker, F.R.; Forbes, S.K. (1997). "Ripening and development of chilling injury in persimmon fruit: An electrical impedance study". New Zealand Journal of Crop and Horticultural Science 25 (2): 149–157. doi:10.1080/01140671.1997.9514001.
- ↑ Texas Food Establishment Rules. Texas DSHS website: Texas Department of State Health Services. 2015. p. 6.