வேளாண் பொறியியல்

வேளாண் பொறியியல் (Agricultural engineering) என்பது வேளாண்மை விளைச்சலும் செயல்முறைகளயும் ஆயும் பொறியியல் புலமாகும். வேளாண் பொறியியல் எந்திரப் பொறியியல், குடிசார் பொறியியல், மின்பொறியியல், வேதிப் பொறியியல் ஆகிய பொறியியல் புலங்களின் அறிவையும் வேளாண்மைத் தொழில்நுட்ப அறிவையும் பயன்படுத்தும் பலபுலப் பொறியியல் ஆகும். இதன் முதன்மை இலக்கு வேளாண்மை ந்டஅடைமுறைகளின் திறத்தை மேம்படுத்தி நீடித்து நிலைக்கச் செய்வதாகும்.[1] இத்தொழில்துறையின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக அமெரிக்க வேளாண், உயிரியல் பொறியியல் கழகம் அமைகிறது.[1]

வேளாண் பொறியியலில் ASABE செந்தரங்கள் தொகு

ASABE செந்தரங்கள் வேளாண் தொழில்துறைக்கான பாதுகாப்பு, ஒழுங்குமுறை செந்தரங்களைத் தருகிறது. இந்தச் செந்தரங்கள், ஒழுங்குமுறைகள் பன்னாட்டளவில் உருவாகியன ஆகும். இவற்றில் உரங்கள், மண் நிலைமைகள், மீன்வளம், உயிர் எரிபொருள்கள், இழுபொறிகள், பிற எந்திரங்கள் ஆகியன் அமைகின்றன.[1]

சிறப்புப் புலமைகள் தொகு

வேளாண் பொறியாளர்கள் கீழ்வரும் பகுதிகளில் பணிபுரிகின்றனர்:

 • வேளாண் கட்டமைப்புகளையும் வேளாண் எந்திரங்களையும் கருவிகளையும் வடிவமைத்தல்
 • வேளாண் எந்திரங்கள் சார்ந்த உட்கனற் பொறி
 • நிலப் பயன்பாடு, நீர்ப் பயன்பாடு உட்பட வேளாண்வள மேலாண்மை
 • பயிர்ப் பாசனத்துக்கும் கால்நடை வளர்ப்புக்குமான நீர் மேலாண்மையும் காப்பும் தேக்குதலும்
 • அளக்கையியல், நிலக்கிடப்பும்
 • காலநிலையியல், வளிமண்டலவியல்
 • மண் மேலாண்மை, காப்பு (அரிமானம், அரிமானக் கட்டுபடு உட்பட)
 • பயிர்கள் சார்ந்த விதைத்தல் உழுதல், அறுவடை, செயல்முறை
 • கால்நடை வளர்ப்பு, கோழி வளர்ப்பு உட்பட, மீன், பால்வள விலங்குகள் கழிவு மேலாண்மை, விலங்குக் கழிவு உட்பட, வேளாண் எச்சங்கள், உரப் பரவல்
 • உணவுப் பொறியியல் வேளாண் விளைபொருள்களைப் பதப்படுத்தல்
 • மின்னோடிகள் சார்ந்த அடிப்படை சுற்றதர்ப் பகுப்பாய்வின் அடிப்படை நெறிமுறைகள்
 • வேளாண் விளைபொருள்களின் இயற்பியல், வேதியியலின் இயல்புகள்
 • உயிர்வளப் பொறியியல் இது சுற்றுச்சூழலின் பாதுகாப்புக்கு மூலக்கூற்று மட்ட எந்திரங்களைப் பயன்படுத்துகிறது.
 • பயிர் சார்ந்த, கால்நடை வளர்ப்பு சார்ந்த செய்முறைகளை வடிவமைத்தல்

வரலாறு தொகு

வேளாண் பொறியியலின் முதல் பாடத்திட்டம் அயோவா பல்கலைக்கழகத்தில் 1903 இல் பேராசிரியர் ஜே.பி. டேவிட்சனால் நடத்தப்பட்டது. அமெரிக்க வேளாண் பொறியாளர் கழகம், இன்றுஅமெரிக்க வேளண். உயிரியல் பொறியாளர் கழகம் 1907 இல் நிறுவப்பட்டது.[2] வேளாண் பொறியியலை நேரடியாகவோ மறைமுகமாகவோ தாக்கிய முழு வரலாற்று நிகழ்ச்சிகள் இங்கு.

வேளாண் பொறியாளர்கள் தொகு

வேளாண் பொறியாளர்கள் பால்வளக் கழிவு. பாசனம் வடிகால், வெள்ளப்பெருக்கு நீர்க் கட்டுபாட்டு அமைப்புகள் ஆகியன சார்ந்த கட்டிடங்களின் திட்டமிடல், மேற்பார்வை, மேலாண்மை ஆகிய பணிகளில் பணிபுரிகின்றனர். இவர்கள் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடுகள், வேளாண் விளைபொருள்களின் செயல்முறைகள், ஆராய்ச்சி விளைவுகளை விளக்குதல், உரிய நடைமுறைகளை செயற்படுத்தல் ஆகியவற்றிலும் ஈடுபடுகின்றனர். பலர் கல்வித் துறைகளிலும் அரசு முகமைகளிலும் அதாவது அரசின் வேளாண்மைத் துறைகளிலும் வேளாண்மை விரிவாக்கப் பணிகளிலும் பணிபுரிகின்றனர். சிலர் தனியார் குழுமங்களில் அறிவுரைஞர்களாக பணிபுரிகின்றனர்; சிலர் வேளாண் எந்திரங்களையும் செயல்முறைகளையும் செய்யும் தொழிலகங்களில் பணிபுரிகின்றனர். சிலர் கால்நடை. பயிர் விளைபொருள் தேக்க கட்டிடத் தொழில் செய்யும் குழுமங்களில் வேலை செய்கின்றனர்.

வேளாண் பொறியாளர்கள் ஆக்கம், விற்பனை, மேலாண்மை, ஆராய்ச்சி, உருவாக்கம் அல்லது பயன்முறை அறிவியலில் எந்தவொரு பகுதியிலும் பணிபுரிகின்றனர்.

பிரித்தானியாவில் வேளாண் கருவிகளைப் பழுதுபார்ப்பவரும் திருத்தி அமைப்போரும் வேளாண் பொறியாளர் என அழைக்கப்படுகின்றனர்.

வேளாண், உயிர் அமைப்புப் பொறியியல் கல்வித் திட்டங்கள் தொகு

கீழே வேளாண் பொறியியல் சார்ந்த இளவல் பட்டக் கல்வித் திட்டங்களும் உயிர் அமைப்புப் பொறியியல் சார்ந்த இளவல் பட்டக் கல்வித் திட்டங்களும் (B.S. or B.S.E. or B.E / B.Tech) பட்டியலிடப்பட்டுள்ளன. இவை வேளாண் பொறியியல் அல்லது உயிர் அமைப்புகள் பொறியியல் உயிரியல் பொறியியல் அல்லது இதுபோன்ற பெயர்களால் அழைக்கப்படுகின்றன. ABET கல்லூரி, பல்கலைக்கழகத் திட்டங்களுக்கு பயன்முறை அறிவியல், கணிப்பு, பொறியியல், பொறியியல் தொழில்நுட்பங்களுக்கு ஒப்புதல் தருகிறது.

ஓசியானியா தொகு

நிறுவனம் துறை வலைத்தளம்
தென்குவீன்சுலாந்து பல்கலைக்கழகம், ஆத்திரேலியா குடிசார் பொறியியல் பள்ளி, உடல்நலப் புலம், பொறியியலும் அறிவியலும் www.usq.edu.au
பிளின்டர்சு பல்கலைக்கழகம்மாத்திரேலியா ணினி அறிவியல் பள்ளி, பொறியியலும் கணிதவியலும் flinders.edu.au பரணிடப்பட்டது 2017-06-17 at the வந்தவழி இயந்திரம்

மேலும் காண்க தொகு

வேளாண்மை அறிவியல்

வேளாண்மைக் கொள்கை

விரிநிலை வேளாண்மை

செறிநிலை வேளாண்மை

உழவியல்

மேற்கோள்கள் தொகு

 1. 1.0 1.1 1.2 "ASABE". www.asabe.org (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-04-13.
 2. "ASABE website". Archived from the original on 14 May 2009. பார்க்கப்பட்ட நாள் May 15, 2009.

மேலும் படிக்க தொகு

 • Brown, R.H. (ed). (1988). CRC handbook of engineering in agriculture. Boca Raton, FL.: CRC Press. ISBN 0-8493-3860-3.
 • Field, H. L., Solie, J. B., & Roth, L. O. (2007). Introduction to agricultural engineering technology: a problem solving approach. New York: Springer. ISBN 0-387-36913-9.
 • Stewart, Robert E. (1979). Seven decades that changed America: a history of the American Society of Agricultural Engineers, 1907-1977. St. Joseph, Mich.: ASAE. இணையக் கணினி நூலக மையம் 5947727.
 • DeForest, S. S. (2007). The vision that cut drugery from farming forever. St. Joseph, Mich.: ASAE. ISBN 1-892769-61-1.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வேளாண்_பொறியியல்&oldid=3588228" இலிருந்து மீள்விக்கப்பட்டது